உள்ளாட்சித்தேர்தலில் முந்தும் அதிமுக..! அதிர்ச்சியில் திமுக..!

By Manikandan S R SFirst Published Dec 15, 2019, 10:27 AM IST
Highlights


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரண்டு நாட்களாக நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிடுவதற்காக திமுக, அதிமுக ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மையம் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறது.

இதனிடையே அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட படியில் அண்மையில் வெளியிடப்பட்டது. தற்போது இரண்டாம்கட்ட பட்டியலையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. திருவள்ளூர் கிழக்கு-மேற்கு, திருவண்ணாமலை வடக்கு- தெற்கு, நாமக்கல், நீலகிரி ஆகிய இடங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல திருச்சி மாநகர்-புறநகர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு- தெற்கு, நாகப்பட்டினம், மதுரை புறநகர் மேற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தெற்கு ஆகிய இடங்களில் ஊரக பகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது.

திமுக சார்பாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. பிற மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என திமுக தலைமை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!