நகர்ப்புற தேர்தல்..தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி வார்டு உறுப்பினர் விருப்பமனு..அதிமுக அறிவிப்பு

By Thanalakshmi V  |  First Published Jan 21, 2022, 8:19 PM IST

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்போர் தங்கள் விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
 


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ விரைவில்‌ நடைபெற உள்ளதை முன்னிட்டு,மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்‌, நகர மன்ற வார்டு உறுப்பினர்‌, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வேட்பாளர்களாகப்‌ போட்டியிட வாய்ப்பு கோரும்‌ கழக உடன்பிறப்புகளிடமிருந்து ஏற்கெனவே விருப்ப மனுக்கள்‌ பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில்‌, ஒருசில நகராட்சிகள்‌ மாநகராட்சிகளாகவும்‌, ஒருசில பேரூராட்சிகள்‌ நகராட்சிகளாகவும்‌ தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளதால்‌, அத்தகைய மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில்‌, கழகத்தின்‌ சார்பில்‌
வேட்பாளர்களாகப்‌ போட்டியிட விரும்புபவர்கள்‌, சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழக அலுவலகங்களில்‌, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய கட்டணத்‌ தொகையைச்‌ செலுத்தி, விண்ணப்பப்‌ படிவங்களைப்‌ பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்‌.

Tap to resize

Latest Videos

மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்‌ 5,000 ரூபாயும் நகர மன்ற வார்டு உறுப்பினர்‌ 2,500 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌, தலைமைக்‌ கழகத்தில்‌ இருந்து அதற்கான விருப்ப மனுக்கள்‌ மற்றும்‌ ரசீது புத்தகங்களைப்‌ பெற்றுச்‌ சென்று, அது சம்பந்தமான விபரங்களை கழக உடன்பிறப்புகள்‌ அனைவரும்‌ அறிந்துகொள்ளும்‌வகையில்‌ அதற்கான ஏற்பாடுகளைச்‌ செய்திட வேண்டும்‌. 

அதே போல்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி விருப்ப மனுக்களைப்‌ பெற வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.தரம்‌ உயர்த்தப்பட்டுள்ள மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்‌ பதவிகளுக்கு, கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட வாய்ப்பு கோரிமனு அளிப்பவர்கள்‌ மட்டுமே, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்‌ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

click me!