எம்.ஜிஆர் மாளிகையானது – அதிமுக அலுவலகம் – பின்னணியில் இவ்வளவு சுவாரசியமான வரலாறா..!

By manimegalai a  |  First Published Nov 22, 2021, 7:05 PM IST

திராவிட கட்சிகளில் ஒன்றான அதிமுக-வின் தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக – வை கட்டியெழுப்பிய எம்.ஜி.ஆர் யின் மாளிகை உருவான கதை குறித்த தொகுப்பு…


சமீபத்தில் நடந்த அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் பொன்விழாவில், ராயபேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர் மாளிகையெனும் பெயரில் மாற்றம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது எம்.ஜி.ஆர் மாளிகை எனும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி அலுவலகம் முதல் எம்.ஜி.ஆர் மாளிகை வரை வரலாறு கூறும் சில உண்மைகள்…

Latest Videos

ஜம்பதுகளில் சினிமாவில் உச்சி புகழ் அடைந்த எம்.ஜி.ஆர் யின் மனைவி ஜானகி சினிமா திரைபடங்களில் கொடிக்கட்டி பறத்த காலம். அப்போது தான் சம்பாதித்த பணத்தில் ராயபேட்டையில் ஒரு இடம் வாங்குகிறார். அது தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் தனிகட்சி தொடங்கி அதிமுக வின் கோட்டையாக உருவாகும் என்பது அப்போது யாரும் அறிந்திருக்கமாட்டார்கள். ஆரம்பத்தில் இதனை தன்னுடைய சினிமா புரோடக்‌ஷன் வேலைகளுக்காக பயன்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். மேலும் சினிமா சார்ந்து பொருட்கள் வைக்கும் குடோனாக தான் அப்பொழுது அந்த இடம் இருந்தது.

பின்னர், எம்.ஜி.ஆர் தாயார் சத்யா அவர்களின் பெயரில் இலவச திருமண மண்டபம் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், திமுக கட்சி தொண்டர்களுக்கு இலவச திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் நடத்தப்பட்டன.

 எம்.ஜி.ஆர் உட்கட்சி பிரச்சனை காரணமாக திமுகவிலிருந்து வெளியேறினார். திமுக வில் தான் பொறுப்புவகித்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எனும் பெயரில் புதுக்கட்சியினை தொடங்கினார். அதிமுக- வை பொறுத்தவரை ,அது தொண்டனால் தொடங்கப்ப்ட்ட கட்சி. வரலாற்றில் முதல் முறை போல,தன்னுடைய தீவிர தொண்டர் ஒருவரால் தொடங்கப்பட்ட அதிமுக எனும் கட்சியில் தன்னை தலைவனாக இணைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.

பின்னர்,ராயபேட்டையில் உள்ள திருமண மண்டபம் அதிமுக கட்சியின் அதிகாரபூர்வ கட்சி அலுவலகமாக செயல்பட தொடங்கியது. அதிமுக வின் கட்சியின் கொடியும் இங்கு தான் வடிவமைக்கப்பட்டது. கட்சி பணி, தேர்தல் பணி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் அங்கு தான் நடைபெற்றது.  எம்.ஜி.ஆர் நடத்திய அண்ணா பத்திரிக்கையும் அங்கு தான் செயல்பட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிமுக அலுவலகம் எம்.ஜி.ஆர் யின் மனைவி ஜானகி பெயரில் இருந்தது. பின்னர், 1985 யில் உயில் எழுதுபோது, கட்சியின் நலனுக்காக எம்.ஜி.ஆர் யின் வலியுறுத்தலில் , கட்சியின் பெயரில் சொத்து மாற்றப்பட்டது. இதனால் ஜானகி ஆதர்வாளர்கள் சிலர், எம்.ஜி.ஆர் - ஜானகி மாளிகை எனும் பெயரில் மாற்றவேண்டும் என்றும் அப்போது கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பிறகு அதிமுக எனும் கோட்டை ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரண்டாக பிரிந்தது. பின்னர் நடந்த தேர்தல் அதிமுகவின் ஜானகி அணி தோல்வியை தழுவவே, ஜெயலலிதா தனது ஆதர்வாளர்களுடன் கட்சியை முழுவதுமாக கைபற்றினார். பின்னர், எம்.ஜி.ஆர் – ஜானகி மாளிகை எனும் கோரிக்கை கைவிடப்பட்டது. அன்று முதல் இன்று வரை அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக எனும் பெயரிலே தொடர்கிறது.

இந்நிலையில் தற்போது அதிமுக பொன்விழா கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ,அதிமுக அலுவலகம் – எம்.ஜி.ஆர் மாளிகை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சசிகலா அணியென்று அதிமுக மறைமுக பிளவுப்பட்டு உள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தின் பெயர் மாற்றம் தொண்டர்களிடையே பலவிதமான கேள்வியை எழுப்பியுள்ளது

click me!