அதிமுகவிற்கு இப்போ இதுதான் வேண்டும்... ஓபிஎஸ் ஆதரவாளர் கருத்து!!

By Narendran SFirst Published Jun 24, 2022, 7:47 PM IST
Highlights

அதிமுகவிற்கு ஒற்றுமையும், கூட்டு தலைமையும் தான் வேண்டும் என கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவிற்கு ஒற்றுமையும், கூட்டு தலைமையும் தான் வேண்டும் என கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப் படுவதாகவும் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடும் என்றும் அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதனிடையே தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

இந்த நிலையில், கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும், அதிமுகவிற்கு ஒற்றுமையும், கூட்டு தலைமையும் தான் வேண்டும் எனவும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.வி.சண்முகம் சொன்ன கருத்து சட்டத்திற்கு உட்பட்டது இல்லை. விரிவான கருத்து பிறகு சொல்கிறேன். தேர்தல் ஆணையத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் சந்திக்கும் சூழ்நிலை தற்போதைக்கு இல்லை.

3 நாட்களில் கட்சியை எப்படி வழிநடத்திச் செல்வது என ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும். நேற்றைய கட்சி பிரச்னையில் நீதிமன்றம் தலையிட்டுள்ளது. கட்சி பிரச்னைகளில் ஏற்கனவே நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டுள்ளது. தலையிட முடியாது என சொல்ல முடியாது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம். எங்கள் தரப்பினரின் நம்பிக்கை கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணம்படி ஆட்சிக்கு வரவேண்டும், ஒற்றுமை வரவேண்டும், கூட்டு தலைமை வேண்டும். இதுதான் எங்கள் எண்ணம் என்று தெரிவித்தார். 

click me!