ஒற்றைத் தலைமைதான் அதிமுகவுக்கு நல்லது.. சசிகலாவுக்கு இனி வாய்ப்பு இல்லை.. காங்.எம்.பி திருநாவுக்கரசர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 6:51 PM IST
Highlights

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் நல்லது என்றும் இனி அக்காட்சியில் சசிகலாவிற்கு வாய்ப்பில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருப்பதுதான் நல்லது என்றும் இனி அக்காட்சியில் சசிகலாவிற்கு வாய்ப்பில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல எதிர்க்கட்சி வலுவாக இருப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. அதற்கு ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கூடிய அதிமுக பொதுக்குழு எந்த முக்கிய முடிவும் எடுக்காமல் பாதியிலேயே கலைந்தது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் பலரும் இதுகுறித்து கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் கட்சி எம்.பி திருநாவுக்கரசர் அதிமுக விவகாரம் குறித்தும் கருத்துக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர்  கூறியதாவது:-  மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சி  எப்படி முக்கியமோ அதேபோல பிரதான எதிர்க் கட்சி வலுவாக இருப்பதும் முக்கியம். அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக யார் இருக்க வேண்டும் என்பதை அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம், ஆனால் ஒரு கட்சி வலுவானதாக இருப்பதற்கு ஒற்றைத் தலைமையாக செயல்படுவதுதான் சரி. அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி, ஒற்றைத் தலைமைதான் சரியாக இருக்க முடியும். இரட்டை தலைமை என்பது எந்த கட்சிக்கும் சரியாக இருக்காது.

அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. ஒற்றைத் தலைமையின் கீழ் இயங்குவதே ஒரு கட்சிக்கும் நாட்டின் ஜனநாயகத்திற்கும் நல்லது. இந்த விஷயத்தில் யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கட்டும், இந்த சூழ்நிலையிலும் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என இருவருமே கூறவில்லை.

சசிகலாவிடம் கட்சியும் இல்லை  கட்சிக்குள் வந்து கட்சியை சசிகலா கைப்பற்றுவதற்கான சாத்தியமும் இல்லை. அக்னிபத் என்ற திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் எடுப்பது பாதுகாப்பு துறையை பலவீனப்படுத்தும், அது இளைஞர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும். டெல்லியில் ராகுல்காந்தியை விசாரணை என்ற பெயரில்  மத்திய அரசு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!