2024-ல் திமுகவை Sweep பண்ணிடுவோம்... டாப் கியரில் தட்டி தூக்கும் அமர் பிரசாத்.

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2022, 5:51 PM IST
Highlights

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை மொத்தமாக துடைத்தெறிவோம்  என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார். அடுத்த முதல்வராக இருக்கட்டும் அல்லது எந்த தேர்தலாக இருக்கட்டும் தமிழ்நாட்டில் பாஜக தான் வெற்றிபெறும் என அவர் அடித்துக் கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை மொத்தமாக துடைத்தெறிவோம்  என பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி கூறியுள்ளார். அடுத்த முதல்வராக இருக்கட்டும் அல்லது எந்த தேர்தலாக இருக்கட்டும் தமிழ்நாட்டில் பாஜக தான் வெற்றிபெறும் என அவர் அடித்துக் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக அதிமுக இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரசு கொண்டு வரும்  திட்டங்கள் ஒவ்வொன்றையும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொரு மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதுமட்டுமின்றி எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக ஏகோபித்த வெற்றி பெறும் என்றும் அண்ணாமலை கூறி வருகிறார்.

தமிழகத்தில் 25 எம்பி இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், சட்டமன்றத் தேர்தலில் 150 க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும் அவர் பேசி வருகிறார். இது ஒருபுறம் இருக்க, அக்கட்சியை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி  2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பாஜக துடைத்தெரியும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:- பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்திய முழுவதும் காங்கிரஸ் ஆதிக்கம் இருந்தது, மாநில கட்சிகளின் ஆதிக்கமும் இருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் உடைத்துவிட்டு பாஜக என்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும்  ஆட்சி அமைத்து வருகிறது. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறது. திட்டமிட்டிருக்கிறது, மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது, இதுபோலத்தான் எதிர்காலத்தில் தமிழகத்தையும் பாஜக கைப்பற்றும். மற்ற மாநிலங்களில் கைப்பற்ற முடியும் ஆனால் தமிழகத்தில் முடியாது, இங்கு திராவிடம் கட்சிகள் உள்ளது என்கிறார்கள் நான் சொல்கிறேன் திராவிடம் என்பது ஒரு வெங்காயம், அது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது, இதை நான் சொல்லவில்லை எங்கள் மாநிலத் தலைவர் சொல்லியிருக்கிறார்.

திராவிடம் என்ற வெங்காயத்தை உரித்து விட்டோம் முழுவதுமாக உரித்து விட்டோம், கடைசியாக ஒரே ஒரு தோல் தான் இருக்கிறது, அதையும் உரித்துப் பார்த்தால் கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் இருக்கிறது. இப்போது அந்த குடும்பம் முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது. ஏகப்பட்ட ஊழல் செய்திருக்கிறார்கள். மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்கள் வீட்டில் இருந்து ஒருவர் திருடிக் கொண்டு போனால் அதைப் பொருத்துக் கொள்வீர்களா?அதுபோலத்தான் மக்களுடைய பணத்தை கொள்ளையடிப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

அதையும் தாண்டி இப்போது பாஜக ஒரு தேசிய மாடலுக்கு வந்துவிட்டது, பல ஆண்டுகளாக இவர்கள் சோசியல் ஜஸ்டிஸ், சமூகநீதி, கடவுள் மறுப்பு என பேசிக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இப்போது இதை இரண்டையும் நாங்கள் உடைத்து விட்டோம். முன்னதாக இருந்த குடியரசுத் தலைவர் ஒரு தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர், இப்போது பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். எங்கள் அமைச்சரவையில் 60% பதிவுகள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் ஒருங்கிணைந்த அரசியல்.

மொத்தம் 117 reserved constituency இருக்கிறது அதில் 27இடங்கள் பாஜகவுக்கு மக்கள் வெற்றியை கொடுத்திருக்கிறார்கள் இது பாஜகவுக்கு கிடைத்திருக்கிற அங்கிகாரம், இதே வெற்றி தமிழகத்திலும் நடக்கும். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூட அவர்கள் பொது தொகுதியில் இடம் கொடுப்பதில்லை, அப்படி இருக்கும்போது இவர்கள் சமூகநீதி பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. இவர்களைபோல யாரையாவது அவமானப்படுத்தி இருக்கிறோமா? 2026 நாங்கள் எப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை பார்த்துவிட்டு நீங்கள் என்னிடம் பேட்டி எடுங்கள். ஏராளமான இளைஞர்கள் பாஜகவில் இருக்கிறார்கள். இளைஞர்களுக்கான வளர்ச்சி அரசியல் செய்யப்பட்டு வருகிறது.

பாஜகவில் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், மற்ற கட்சிகளுக்கு போனால் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை, திமுகவுக்கு போனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும், அல்வாதான் கிடைக்கும். அங்கு அடுத்து உதயநிதி ஸ்டாலின் தான் முதல்வராக வருவார், அவர்களே பேசிக்கொள்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் அடுத்து எந்த பதவியாக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் சரி எந்த பதிவியாக இருந்தாலும் சரி பஜகதான் வெல்லும். எங்க தலைவர் அண்ணாமலை 25 எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவோம் என்கிறார். 

அதை ஏதோ வார்த்தைக்காக சொல்லவில்லை, புள்ளி விவரத்தோடு, ஆதாரத்தோடு அறிவியல்பூர்வமாக கணித்து செல்கிறார். ஆனால் என்னுடைய ஆசை, நாங்கள் திமுகவை துடைத்தெறிவோம். மக்களுக்கு இவர்களை பிடிக்கவே இல்லை, ஏன் இவர்களுக்கு ஓட்டு போட்டோம் என மக்கள் புலம்புகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
 

click me!