#BREAKING அதிமுக எம்.பி. மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 23, 2021, 06:04 PM IST
#BREAKING அதிமுக எம்.பி. மாரடைப்பால் மரணம்... அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ்...!

சுருக்கம்

அதிமுக எம்.பி. மாரடைப்பால் மரணடைந்த சம்பவம் அக்கட்சியினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.பி. மாரடைப்பால் மரணடைந்த சம்பவம் அக்கட்சியினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

1996, 2001 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான்.  ஜெயலலிதா அமைச்சரவையில் சில மாதங்கள் அமைச்சராக பதவி வகித்தவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் முகமது ஜான் பணியாற்றி வந்தவர். 2019ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்து  ராஜ்யசபா எம்பி பதவிக்கு  அதிமுக சார்பில் முகமது ஜானை தேர்வு செய்தனர். 

முதற்கட்ட தகவலின் படி, சட்டமன்ற தேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. தேர்தல் நேரத்தில் கட்சியின் மூத்த உறுப்பினரும், ராஜ்யசபா எம்.பி.யுமான முகமது ஜானின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!