திமுக மீது கடுப்பில் ராகுல்காந்தி... தமிழகத்தில் கால்பதிக்கும் ப்ரியங்கா காந்தி..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2021, 5:03 PM IST
Highlights

காங்கிரஸுக்கு 25 சீட்டுகள் என்றான பின்பு அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழகத்தில் மார்ச் 30 ஆம் தேதி தாராபுரத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி மதுரை, கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தாராபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவதாலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக போட்டியிடுவதாலும் பிரதமர் மோடி இப்பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும் மோடியுடன் இந்த பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மட்டுமல்ல அவருக்கும் முன்னும் பின்னுமாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, வி.கே.சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் என்று ஏராளமானோர் பாஜக கூட்டணிக்காக தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் சார்பில் இதுவரைக்கும் யாரும் வரவில்லை. கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்யப்படுவதற்கு முன்னதாக ராகுல் காந்தி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். ஆனால் காங்கிரஸுக்கு 25 சீட்டுகள் என்றான பின்பு அவர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அடுத்த கட்டமாக பிரியங்கா காந்தியை பிரச்சாரத்துக்கு அழைத்து வர கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விஜய் வசந்த் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

click me!