அதிமுகவுக்கு ஆதரவாகத்தான் கமல் ஹாசன் களமிறங்கியுள்ளார்.. அதிரவைத்த திமுக செய்தி தொடர்பாளர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2021, 4:17 PM IST
Highlights

இந்த தேர்தல் வெற்றி பாஜக விற்கு மறக்க முடியாத அடியாக இருக்கும். எனவும் அந்த அடியை மக்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள் என திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி பாஜக விற்கு மறக்க முடியாத அடியாக இருக்கும். எனவும் அந்த அடியை மக்கள் அவர்களுக்கு கொடுப்பார்கள் என திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிச்சாமி  ஒரு போலி விவசாயி என்று ஸ்டாலின் பல முறை சொல்லி இருந்தார். அவருடைய வேட்பு மனுவில் 9ம் பக்கத்தில் வேளாண்மை நிலம் ஒன்றும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அடி நிலம் கூட இல்லாதவர் பழனிச்சாமி. இனிமேலாவது அவர் ஒத்து கொள்வாரா? என்று தெரியவில்லை எனவும், பாஜக வின் அடிமை ஆட்சி அதிமுக என்று நாங்கள் பலமுறை கூறினோம். எங்களுடைய ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என அதிமுக முன்னாள் எம். பி அன்வர் ராஜா கூறியுள்ளார். திமுக தலைவருக்கு என்ன தகுதி இருக்கு என்று அவர்கள் கூறுகிறார்கள், அதுவும் நாங்கள் போட்ட மேம்பலத்தில் நின்று கொண்டு கூறுகிறார்கள். 

திமுக வினர் குண்டாக இருப்பார்கள் என பழனிச்சாமி கூறியுள்ளார். ஸ்டாலின் மற்றும் பழனி சாமியை ஒன்றாக நிற்க வைத்து பார்த்தால் தெரியும் யார் குண்டாக இருக்கிறார்கள் என்று. திமுக வினர் மக்களுக்காக உழைத்ததால் இளைத்து இருக்கிறோம் என்று அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் நாட்டு மக்களை காக்கத்தான் ஸ்டாலின் மக்களை நேரடியாக சென்று பார்த்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி இனிமேலாவது உண்மையை பேச வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் செந்தில் பாலாஜி பேசியது ஒரு மக்கள் தலைவனாக பேசி இருக்கிறார். அது கரூர் மாவட்ட மக்களுக்கானது மட்டும் அல்ல,அனைத்து மக்களுக்குமானது. 

கமல் சினிமா உலகத்தில் பெரிய அறிவாளி அதை நான் ஒத்து கொள்கிறேன். அதிமுகவிற்கு ஆதரவாகதானே அவர்கள் நிற்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். இந்த  தேர்தல் வெற்றி பாஜக விற்கு மறக்க முடியாத அடியாக இருக்கும், அதனை மக்கள் கொடுப்பார்கள். சகாயம் பொறுத்தவரை  முதல் முறையாக அரசியலுக்கு வந்துள்ளார். இந்த நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் செய்யட்டும். ஆனால் 20 தொகுதியில் நின்றால் எப்படி முடியும்.அவருக்கு பொறுமை வேண்டும். யார் அரசியலுக்கு வந்தாலும் பொறுமை வேண்டும். பொறுமை இல்லை என்றால் மக்கள் உங்களை ஏற்று கொள்ள மாட்டார்கள். திருவல்லிக்கேணி பகுதியில் நிச்சயம் உதயநிதி வெற்றி பெறுவார். அந்த மக்களுக்கு நிறைய நல்லது செய்வார். இவ்வாறு பேசினார். 
 

click me!