துணி துவைத்து... தோசை சுட்டுக் கொடுத்து... வேட்பாளர்களின் அடேங்கப்பா அட்ராசிட்டி..!

By Thiraviaraj RMFirst Published Mar 23, 2021, 4:01 PM IST
Highlights

விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டுக்கொடுத்து மக்களின் ஆதரவை திரட்டினார். இன்னும் என்னென்ன கூத்துக்களையெல்லாம் வேட்பாளர்கள் அரங்கேற்ற இருக்கிறார்களோ..!

டீக்கடையில் டீ குடிப்பது, வடை சாப்பிடுவது, சூப் கடையில சூப் போடுவது, தோசை கடையில் தோசை போடுவது, எல்லாம் தேர்தலின்போது வழக்கமானது. இதனையெல்லாம் தாண்டி நாகை அதிமுக வேட்பாளர் ஒரு வீட்டில் துணி துவைத்து காயப் போட்டிருக்கிறார். வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கச் செல்லும் வேட்பாளர்கள், புதுப்புது யுக்திகளைக் கையாண்டு மக்களைக் கவர முயன்று வருகின்றனர். மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கி.காசிராமன் கிராமம்தோறும் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிக்கும்போது அங்குள்ள கருவேல மரங்களை அரிவாளைக்கொண்டு வெட்டி ``இயற்கையைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு வாக்குச் சேகரிக்கிறார்.

செய்தி:
நாகை அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது ஒரு வீட்டில் சோப்பு போட்டு, துணிதுவைத்து கொடுத்தாராம்.

2016-ல் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்பது இப்படித்தானா Mr.OPS?

இருந்த லாண்டரி கடைக்காரர் வேலையும் போச்சா. pic.twitter.com/GRRbN9aFQ1

— Ganesan Beemrao Ex.MLA (@Beemrao7)

 

அதேபோல், நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன் இன்று நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த வேட்பாளர், அவரை நகரச் சொல்லிவிட்டு அந்த இடத்தில் அமர்ந்தார். பின்பு, அங்கிருந்த துணியைத் துவைத்தவாறே இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு மக்களிடம் வாக்குச் சேகரித்தார்.

பெண்மணியிடம் துணியை வாங்கிய அ.தி.மு.க வேட்பாளர் அதைத் துவைத்து, சோப்பு போட்டுப் பிழிந்து அந்தப் பகுதியிலிருந்த அனைத்து மக்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். நாகூரில் அ.தி.மு.க வேட்பாளர் துணி துவைத்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதேபோல் விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா சின்மயா நகர் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டுக்கொடுத்து மக்களின் ஆதரவை திரட்டினார். இன்னும் என்னென்ன கூத்துக்களையெல்லாம் வேட்பாளர்கள் அரங்கேற்ற இருக்கிறார்களோ..!

click me!