இந்த விஷயத்துல தயவு தட்சணையே கிடையாது.. விசிக முக்கிய பிரமுகர் அதிரடி நீக்கம்.. திருமாவளவன் அறிவிப்பு..!

Published : Mar 23, 2021, 03:27 PM IST
இந்த விஷயத்துல தயவு தட்சணையே கிடையாது.. விசிக முக்கிய பிரமுகர் அதிரடி நீக்கம்.. திருமாவளவன் அறிவிப்பு..!

சுருக்கம்

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை மீறி சுயேச்சையாகப் போட்டியிடும் மண்டல அமைப்புச் செயலாளரைக் கட்சியை விட்டு நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு ஒதுக்கப்படாத திட்டக்குடி (தனி) தொகுதியில் மண்டல அமைப்புச் செயலாளர் சு. திருமாறன் என்கிற அய்யாசாமி வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக அம்மனுவைத் திரும்பப் பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், அவர் அவ்வாறு திரும்ப பெறாமல், சுயேச்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராகப் போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். அத்துடன், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிக்கையாகும். 

கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டலச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார். கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?