அதிமுகவை பாஜக நிர்பந்தம் செய்தது... இந்துராஷ்டிரம் அமைப்பதே பாஜக திட்டம்..!! அதிமுக எம்பி அதிரடி சரவெடி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2019, 5:57 PM IST
Highlights

இந்த மசோதா மூலம் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று தங்களுடைய வாக்கு  வாங்கியாக அதை மாற்றி இந்திய அரசியலில் பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர் . 

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அதிமுக ஆதரித்தது என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர்  பாலசுப்ரமணியன் கூறியுள்ளார், அதே நேரத்தில் இந்து ராஷ்டிரத்தை  உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த சட்டத்திருத்தத்தை   பாஜக கொண்டு வந்திருக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார் .  பாஜக கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நாடு முழுவதும் மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் .  இதனால் ஆங்காங்கே போராட்டங்களும் வன்முறைகளும் நடந்து வருகிறது . 

இந்நிலையில் அதிமுக இந்த மசோதாவை ஆதரித்திருப்பது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருந்தது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் வெளிப்படையாக கூறியுள்ளார்  இந்நிலையில்  தனியார் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ,  கூட்டணிக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து பாஜக தான் கொண்டு வந்த மசோதாவை ஆதரிக்க செயதது .  ஆனால் அந்த அழுத்தத்தை நேரடியாக தரவில்லை . இம்மசோதாவில் முஸ்லிம் என்ற வார்த்தை இடம்பெறாதது தவறு என்றார். 

இந்த மசோதா மூலம் ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று தங்களுடைய வாக்கு  வாங்கியாக அதை மாற்றி இந்திய அரசியலில் பாஜகவை அசைக்க முடியாத சக்தியாக மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சிக்கின்றனர் .  எப்போதெல்லாம் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்து  ராஷ்டிரத்தை  உருவாக்குவது,   இந்து வாக்கு வங்கியை தங்களுக்கானதாக்குவது போன்ற நடவடிக்கைகளில்   உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபடுவார். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு  ஆதரவு அளித்திருப்பதால்  அதிமுகவுக்காக சிறுபான்மை வாக்கு வங்கியில் சேதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது , சிறிய அளவு சேதம் இருக்கும் என்றார். 

  

இந்த மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து அதிமுக  விவாதித்தது. பின்னர்  பாராளுமன்றத்தில் இருக்கும்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது  அதில் பேசிய  தலைமைச்செயலக துணைச்செயலாளர் மசோதாவுக்கு  ஆதரவாக வாக்களியுங்கள் என்றார் அதனை ஏற்று மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என  பாலசுப்ரமணியன் கூறியுள்ளார். 

click me!