நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கையில் சந்தேகம்... சூப்பர் ஸ்டாரை சீண்டும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Dec 16, 2019, 4:19 PM IST
Highlights

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்தியாவில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் மசோதாவை ஆதரித்ததாக தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அவர் 2021-ம் ஆண்டில் கூட கட்சி ஆரம்பிப்பது சந்தேகம் தான் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை ராயபுரம் பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தல் கூட்டணி இணக்கமாக உள்ளதாகவும், கூட்டணியில் எந்த ஒரு மனகசப்பும் இல்லை என்றார். நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கைகளை பார்க்கும்போது அவர் கட்சி தொடங்குவது கடினம் என கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் அதிமுகவை மீறிய சக்தி எதுவுமில்லை. திமுக கார்ப்பரேட் நிறுவனம் போல செயல்படுகிறது. மக்கள் நாடித்துடிப்பை அறிந்தவரே உண்மையான தலைவர். கட்சி ரீதியாக மோதினாலும் தனிப்பட்ட ரீதியில் பத்திரிகையில் எழுதினாலும் நாங்கள் மோதுவோம் என்று தெரிவித்தார்.

click me!