குடியுரிமை இல்லாதவர்கள் நாடு கடத்தப்படுவர்..!! மிரட்டிய பாஜக மூத்த தலைவர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2019, 2:36 PM IST
Highlights

 . இந்த சட்டத்தை எதிர்ப்பது போலத்தான் காஷ்மீர் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் போராடினார், ஆனால் தற்போது அது என்ன ஆனது.?  

குடியுரிமை பெறாமல் இந்தியாவில் தங்கி உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களை நாடு கடத்தப்படுவர் என சுப்ரமணியசாமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  குடியுரிமை  திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் கலவரத்தீ  பரவி வருகிறது சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது .  குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் .  

 இச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தாத மாட்டோம், இது மன்னின் மைந்தர்களை பாதிக்கும், இஸ்லாமிய சகோதரர்களை தனிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது  எனக் கூறி,   கேரளா ,  பஞ்சாப் ,  மேற்கு வங்கம் ,  உள்ளிட்ட  மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன . இந்நிலையில் அரசியல்  சர்ச்சைகளுக்கு பெயர் போன பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியன் சாமி இது குறித்து தெரிவித்துள்ள கருத்து மேலூம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  இப் புதிய சட்டத்தை எதிர்த்து நேற்று  டெல்லியில் ஜம்மீயா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்துள்ளது, இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்  பேசிய சு. சாமி,  

இந்திய குடியுரிமை சட்டம் பற்றி முழுமையாகத் தெரியாமல் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன ,  குடியுரிமை இல்லாதவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றார், ஆனால்  அரசியலுக்காக திமுக இந்த சட்டத்தை எதிர்க்கிறது அதேநேரத்தில் இந்திய குடியுரிமை பெறாமல் இந்தியாவில் தங்கியுள்ள நபர்களை தேடிப்பிடித்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார் .  இந்த சட்டத்தை எதிர்ப்பது போலத்தான் காஷ்மீர் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் போராடினார், ஆனால் தற்போது அது என்ன ஆனது.?  காஷ்மீரில் போராட்டம் நடத்தினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள், எதிர்கட்சிகள் அதற்கு   குறைந்தது டெல்லியில் ஆவது போராட்டம் செய்திருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சிகள் அதைக்கூட செய்யவில்லை இப்போது அமைதியாகி விட்டார்கள் அதேபோலத்தான் இந்த சட்டத்தின்  முடிவும் இருக்கும் என்றார் . 

click me!