வம்பிழுப்பாரு வாய் திறக்காதீங்க...! ஜெ. பாணியில் சட்டசபையில் சும்மா இருக்க உத்தரவு!

First Published Jan 3, 2018, 1:53 PM IST
Highlights
ADMK MLAs should not interrupt Dinakaran in assembly if he talks against govt


தினகரன் தனது கன்னிப்பேச்சை ஆரம்பிக்கும்போது அதிமுக சட்டசபையில் டிடிவி தினகரன் அரசை விமர்சித்தால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால், தொடரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று முதல்வர் , துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் 102 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளார்கள்.  கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, பவுன் ராஜ், பிரபு, ஆறுகுட்டி, பாஸ்கரன், சிவசுப்பிரமணியன் ஆகிய  7 எம்எல்ஏக்கள் சொந்தக்காரணங்களால் பங்கேற்க முடியவில்லை என கட்சி தலைமைக்கு தெரிவித்தாக கூறப்பட்டது.  

தினகரன் முதல்முறையாகச் சட்டமன்றம் வரவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தினகரன் தனது கன்னிப்பேச்சை ஆரம்பிக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் யாரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபடக் கூடாது. அரசுக்கு எதிராக தினகரன் விமர்சனம் செய்தாலும் அமைதிகாக்க வேண்டும். அரசு கொறடாவின் உத்தரவை மீறி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் செயல்படக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை முதல்வர் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆட்சி நீடிக்க, மெஜாரிட்டிக்கு 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கணும்,  அதிமுக அரசுக்கு சபாநாயகரைச் சேர்த்து 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது இந்தக் கூட்டத்தின் மூலம் நிருபன மாகியுள்ளதால். ஆளும் அணி ஆட்டம் கண்டுள்ளதால் ஜெயலலிதா பாணியை கையாண்டுள்ளர்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் ஜெயலலிதா பேச அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் வாய் திறப்பார்கள் அதேபோல, தினகரன் என்னதான் உசுப்பேத்தி, வம்பிழுத்தாலும் யாரும் தினகரனிடம் ஆக்ரோஷமாக, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது.  மொத்தத்தில் எல்லோரும் பேசாமல் சும்மா இருந்தால் போதும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

click me!