"ரஜினிக்கு எதிராக எடப்பாடியின் மறைமுகப் போர்" - யுத்த களத்தில் தளபதிகளான அமைச்சர்கள் ...

First Published May 28, 2017, 6:36 PM IST
Highlights
ADMK Ministers Condomns Statements Against Rajinikanths speech


சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் ஒன்லைன் பொலிடிக்கல் டாக் தமிழக அரசியல் தலைவர்களை இயங்க முடியாத படி ஹேங் ஆகச் செய்துள்ளது. பல தலைவர்களும் ஆண்டி வைரஸ் இன்ஸ்டால் செய்து மூச்சு விடாமல் நிசப்தமாக இருக்க,  முதல் அமைச்சர் எடப்பாடி மட்டும் இலைமறைக் காயாக பாட்ஷா படையை எதிர்க்கத் துணிந்திருக்கிறார். 

சிஸ்டம் சரியில்லை என்ற வார்த்தை எடப்பாடிக்கு ஏகத்துக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. "என்ன பேசிட்டு இருக்காரு.... இந்த சிஸ்டத்திலேயே வாழ்ந்து பல நூறுகோடிகளை சம்பாதித்த ரஜினி, புகுந்த வீடான தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லைனு எப்படி சொல்லமுடியும்னு" உடனிருந்தவர்களிடம் பொறிந்தள்ளினாராம் எடப்பாடி... 

வெளிப்படையா எதையும் சொல்லாதீங்கனு நெருக்கமானவர்கள் சீரியஸ் அட்வைஸ் கொடுக்க, திண்டுக்கல் சீனிவாசன்., சி.வி.சண்முகம் தனது காட்டத்தை எடப்பாடி வெளிக்காட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதும் தொடங்காததும் அவரது விருப்பம்.ஆனால் தமிழகத்தில் “சிஸ்டம்” சரியில்லை என்று கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்ற திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு எடப்பாடியின் எசப்பாட்டு தானாம். 

ரஜினி ஒரு வியாபாரி என்றும் நேரத்திற்கு ஒன்றை பேசுவார் என்றும் அவர்கள் கேலி பேசினார்கள். தமிழகத்தில் இப்போதுள்ள சிஸ்டத்தில் தானே ரஜினி கோடிகோடியாக சம்பாதித்தார். என்ற சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு பின்னணியிலும் எடப்பாடியின் ஆங்கிரி வாய்ஸ் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்ல, சம்பாதித்த பணத்தை கர்நாடகாவிலும், உலக அளவிலும் சொத்துக்களாக மாற்றி வைத்திருக்கிறார் என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

click me!