திமுகவின் புதிய தலைவர் இவர்தான்...?? அமைச்சர் கொளுத்திப் போட்ட சரவெடி... ஸ்டாலின், உதய்க்கு பீதி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2019, 2:20 PM IST
Highlights

 பிரசாந்த் கிஷோர் மட்டுமே அந்த கட்சியின் தலைவர், ஏன் என்றால்  மக்கள் நாடித் துடிப்பை அறிந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும் .  ஆனால் திமுக விடம் அந்த பக்குவம் இல்லை . 

திமுக கத்தி எடுத்தால் நாங்கள் துப்பாக்கி எடுப்போம் நாங்கள்  கோழைகள் அல்ல வீரம் நிறைந்தவர்கள்  என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள கருத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வட சென்னை பகுதியில் ஏழை பெண்களுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சமூக நலத்துறை இணைந்து 2019-2020 ஆம் ஆண்டிற்கான தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி  சென்னை ராயப்புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்றது.  இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். அப்போது பேட்டி அளித்த அவர்;- 


தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஒரு உன்னதமான திட்டம் ,  12ம் வகுப்பு முடித்த மகளிருக்கு திருமணமானால் 25 ஆயிரமும் 8 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.  நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கைகளை பார்க்கும்போது 2021ல் கூட அவர் கட்சி ஆரம்பிப்பது சந்தேகம்  ஆனால்  கராத்தே தியாகராஜனும், தமிழருவி மணியனும் அவரை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார்கள் அது நடக்காது.  ஆனால் தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும்  அதிமுகவை விஞ்ச முடியாது . 


குடியுரிமை திருத்த சட்ட மசோதாவால் இந்திய நாட்டில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை .  குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  அதனால்தான் அந்த மசோதாவை அதிமுக ஆதரித்தது.  ஆனால்  கத்திரிக்காய்க்கு காய்க்கு கால்  முளைத்தது போல் உதயநிதி ஸ்டாலின் இதில் கருத்து கூறியுள்ளார்.  திமுக கார்ப்ரேட் செக்டார் ஆகிவிட்டது.  பிரசாந்த் கிஷோர் மட்டுமே அந்த கட்சியின் தலைவர், ஏன் என்றால்  மக்கள் நாடித் துடிப்பை அறிந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும் .  ஆனால் திமுக விடம் அந்த பக்குவம் இல்லை . திமுக தலைவர் வாய் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் நாங்கள் பேசினால்  தனிப்பட்ட வாழ்க்கையில் திமுக தலைவர் எந்த அளவிற்கு மோசமானவர் என்பது தெரியவரும் . 

நீங்கள் கத்தி எடுத்தால் நாங்கள் துப்பாக்கி எடுப்போம் நாங்கள் கோழைகள் அல்ல வீரம் நிறைந்தவர்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசின் சார்பில் அழுத்தம்  கொடுக்கப்படும் . தேர்தல் என்ற வார்த்தையே திமுகவிற்கு பிடிக்காது . தேர்தலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதிலும்,  தேர்தல் நடத்தக்கூடாது என்பதிலும்  திமுக உறுதியாக உள்ளது.  வரும்   2021ல்  திமுக திக போல் ஆகிவிடும் என்றும் அவர் திமுகவை விமர்சித்தார். 

click me!