தன்மானம் கிலோ என்னா விலைன்னு தெரியுமா டியர்?: காங்கிரஸை கதறவிடும் முறுக்கு மீசை அமைச்சர்

By Vishnu PriyaFirst Published Jan 20, 2020, 6:10 PM IST
Highlights

“தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரையில் அபத்தம் நிகழ்கிறது. ஒருவர் வீட்டை விட்டு வெளியே போ என்று கூறிய பிறகும், அந்த வீட்டிற்குள் நுழைவது என்ன தன்மானம்? அப்படியொன்று இருக்கிறதா! என்பதை காங்கிரசார்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று விளாசியிருக்கிறார். 
தேவையா இந்த அவமானம்?

’உங்கிட்ட அடி வாங்குன பிறகு யார் அடிச்சாலும் அதை தாங்கிக்குற ஒரு பவர் வந்துடுச்சுடா தம்பி!’ என்று என்கவுன்ட்டர் ஏகாம்பரம் வடிவேலுவின் டயலாக்தான் நினைக்கு வருகிறது, காங்கிரஸைப் பார்க்கும் போது. அந்தளவுக்கு ஆளாளுக்கு வெச்சு செய்கிறார்கள் அந்த இயக்கத்தை. ஆனாலும், எல்லா விமர்சனங்களையும் கண்கள் கலங்கினாலுங்கூட மனம் கலங்காமல் அக்கட்சி கடந்து போவதுதான் ஹைலைட்டே. சமீபத்தில் தி.மு.க.கூட்டணிக்குள் ஒரு உள் போர் நடந்தது. அக்கூட்டணியின் தலைவரான தி.மு.க.வுக்கும், உள்ளே இருக்கும் பிரதான கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் பெரும் போர் நடந்தது. காரணம், உள்ளாட்சி தேர்தல். அத்தேர்தலில் காங்கிரஸுக்கு முறையாக சீட்களும் வழங்கவில்லை, பதவிகளும் வழங்கப்படவில்லை என்பதே அக்கட்சியின் கோபம். இதை வெளிப்படையான அறிக்கையின் அக்கட்சியின் மாநில தலைவரான கே.எஸ்.அழகிரி காண்பிக்க, திருப்பித் தாக்கி தள்ளிவிட்டது தி.மு.க. 

உச்சகட்டமாக துரைமுருகன் ‘ஓட்டே இல்லாத காங்கிரஸ் எங்கள் கூட்டணியை விட்டே போனாலும் கவலையில்லை!’ என்று போட்டுப் பொளந்தார். இம்மாம் பெரிய அவமானத்தை தாங்கிக்கொண்டு, மறுநாளே அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து சமாதானம் செய்தார் அழகிரி. அதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ’இப்படி ஸ்டாலினின் காலில் விழுந்து கூட்டணியை தொடர்ந்து பத்து எம்.எல்.ஏ.க்கள் ஜெயிப்பதை விட, தனியாக நின்று நாலு எம்.எல்.ஏ.க்கள் ஜெயிப்பதுதான் கெளரவம்.’ என்று சோஷியல் மீடியாக்களில் எழுதினர். ஆனால் இதற்கு காதுகொடுக்கவோ, கேட்கவோதான் காங்கிரஸின் நிர்வாகிகளுக்கு மனமில்லை.  
இந்த நிலையில், காங்கிரஸை  தி.மு.க. கூட்டணிக்கு சம்பந்தமே அ.தி.மு.க.வும் திட்டி தீர்ப்பதும், விமர்சிப்பதும்தான் கதர் டீமை கண்ணீர் விட வைத்திருக்கிறது.  செய்தித் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ விருதுநகரில் பேசுகையில் காங்கிரஸை வெச்சு செய்திருக்கிறார் 

இப்படி....“தமிழகத்தை தி.மு.க. ஆட்சி செய்தபோது தமிழில்தான் கோயில் குடமுழுக்கை நடத்தினார்களா என்ன? எது ஆகம விதியோ அதன் படி அரசு முடிவெடுத்து நடத்தும். ரஜினிகாந்த் பேசும்போது யோசித்து, நல்லதை பேச வேண்டும். குடியுரிமை சட்டம், சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படா வண்ணம் செயல்படுத்தப்படும். லோக்சபா தேர்தலில் 38 தொகுதிகளில் வென்ற தி.மு.க. இப்போது தேய துவங்கிவிட்டது. ஆனால் எங்களுக்கு இது வளர்பிறை.” என்றவர், பின் மேட்டருக்கு வந்தார் ...“தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரையில் அபத்தம் நிகழ்கிறது. ஒருவர் வீட்டை விட்டு வெளியே போ என்று கூறிய பிறகும், அந்த வீட்டிற்குள் நுழைவது என்ன தன்மானம்? அப்படியொன்று இருக்கிறதா! என்பதை காங்கிரசார்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று விளாசியிருக்கிறார். 
தேவையா இந்த அவமானம்?
 

click me!