ஜெயலலிதாவுக்கு சசிகலா கும்பல் செய்த சதித்திட்டங்கள்... அடுக்கடுக்காய் கூறி அதிர வைக்கும் அமைச்சர்..!

Published : Jan 20, 2020, 04:53 PM IST
ஜெயலலிதாவுக்கு சசிகலா கும்பல் செய்த சதித்திட்டங்கள்... அடுக்கடுக்காய் கூறி அதிர வைக்கும் அமைச்சர்..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் சசிகலா கும்பல் அபகரித்து விட்டதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் சசிகலா கும்பல் அபகரித்து விட்டதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். பிறந்தநாள் விழா பொதுகூட்டம் கலவை பஸ் நிலையம் அருகே நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, ‘’எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது 100 நாட்கள் கூட நடத்த முடியாது என கூறிய நிலையில் 48 ஆண்டுகளாக வெற்றிக்கரமாக செயல்பட்டு வருகிறது. இதில் 30 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் அதிமுக உள்ளது.

கடந்த 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் நடந்த பொது தேர்தலில் அதிமுக தோல்விக்கு சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் செய்த தவறுதான் காரணம். இது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் மன்னார்குடி மாபியா கும்பல் தன்னுடைய சொத்தாக ஆக்கிரமித்து கொண்டது. தற்போது, ஜெயலலிதாவின் வீட்டையே தன்னுடைய வீடு என அவர்கள் நினைக்கின்றனர்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

77 லட்சம் பெயர் நீக்கம்..! SIR அதிரடி குறித்து அண்ணாமலை பேட்டி
டோட்டல் காலி..! சென்னை குலுங்கவில்லை.. காலை வாரிய ஜிகே மணி.. அன்புமணி தான் டாப்