தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது அதிமுக எம்எல்ஏ கூட்டம் – எம்.பிக்களையும் சந்தித்தார் சசிகலா......!!!

 
Published : Jan 27, 2017, 07:23 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது அதிமுக எம்எல்ஏ  கூட்டம் – எம்.பிக்களையும் சந்தித்தார் சசிகலா......!!!

சுருக்கம்

தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்தது அதிமுக எம்எல்ஏ கூட்டம் – எம்.பிக்களையும் சந்தித்தார் சசிகலா

அதிமுகவின்  முதலமைச்சர் ஒ. பன்னீர்  செல்வம் உள்ளிட்ட  234  எம் எல் ஏக்கள், 49 எம்பிக்களை அதிமுக  பொதுச் செயலாளர் சசிகலா,  திடீரென  இன்று நேரில் அழைத்து சந்தித்தார் . ஒட்டுமொத்தமாக   எம் பிக்கள் மற்றும்  எம்எல் ஏக்களை  கூட்டத்திற்கு  சசிகலா  அழைத்ததால்  பரபரப்பும்  எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில்,  மாலை 5 மணி அளவில்,  ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில்,   எம்பிக்கள் மற்றும்  எம்எல் ஏக்களை  கூட்டம்  தனி தனியா நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சசிகலா  கட்சி எம்பிக்கள் மற்றும்  எம்எல் ஏக்கள் கடைப்பிடிக்க வேண்டிய  மிக முக்கியமான விதிமுறைகளை மட்டும்  தெரிவித்துவிட்டு , கூட்டத்தை  முடித்துக் கொண்டாராம் . குறிப்பாக  பி.எச்  பாண்டியன், கே பி.  முனுசாமி  போன்ற  முன்னாள்களின்  வலையில்  சிக்கிவிடக் கூடாது என்பதற்காக  கடுமையான  மறைமுக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாம் .

கே.பி. முனுசாமிக்கு  ஆதரவாக  ஒரு எம்.பியும் ,  சசிகாலா  புஷ்பாவுடன்  ஒரு எம்.பியும்,  பி.எச் பாண்டியனுடன் ஒரு சில  நிர்வாகிகளும் தொடர்பில் இருப்பதால், அவர்களுக்கு சில விதிமுறைகளை புரிய வைக்கவே  ஒட்டுமொத்த  கூட்டத்திற்கான  ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

அதனால், சொல்ல வேண்டிய  கருத்துக்களை  மட்டும் சொல்லிவிட்டு  ஒரு சில நிமிடங்களிலேயே  கூட்டங்கள் முடித்துக்கொள்ளபட்டதாம்  

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!