அதிமுக ஒரு சிங்கிள் சிங்கம் !! ரஜினியும், கமலும் சேர்ந்தா எங்களுக்கு ஒண்ணும் கவலையில்லை !! அதிரடி சரவெடி ஜெயகுமார் !!

Published : Nov 19, 2019, 09:20 PM IST
அதிமுக ஒரு சிங்கிள் சிங்கம் !!  ரஜினியும்,  கமலும் சேர்ந்தா எங்களுக்கு ஒண்ணும் கவலையில்லை !! அதிரடி சரவெடி ஜெயகுமார் !!

சுருக்கம்

மக்கள் நலனுக்காக நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் சேர்ந்து அறித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயகுமார், ரஜினியும்,  கமலும் சேர்ந்தா என்ன ? சேரலைன்னா என்ன? எங்களுக்கு ஒண்ணும் கவலையில்லை என தெரிவித்துள்ளார்.  

தமிழக மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுடன் இணைவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். முன்னதாக, கமலும், '' தேவைப்பட்டால், ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன்'' எனக்கூறினார்.

கமலும், ரஜினியும் இணைந்து இவ்வாறு கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதன் மூலம் இரு கட்சிகளும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார் , ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும், தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை.   

ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்ந்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என்று கூறிய அவர், , 2021ஆம் ஆண்டிலும் அதிமுகதான்  ஆட்சியைப் பிடிக்கும் என கூறினார்.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் தள்ளு முள்ளு.. நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பான சூழல்..