நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பாக இணைவோம் !! கமல் அதிரடி !!

Published : Nov 19, 2019, 08:09 PM IST
நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் கண்டிப்பாக இணைவோம் !! கமல் அதிரடி !!

சுருக்கம்

தமிழக அரசியலில் நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தைலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சினிமா, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் கமல்ஹாசனின் பங்களிப்பை பாராட்டி, செஞ்சூரியன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. 

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டினார்.

இதனையடுத்து  சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது படிக்காத எனக்கு முதன் முறையாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

ரஜினி சொன்ன அதிசயம் உண்மை தான். நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்று அதிரடியாக தெரிவித்தார்.

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம். நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்சே நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என கமல்ஹாசன் கூறினார்..

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!