கூட்டணிக்குள் இருந்தே வேட்டு... எம்.பி.யாக்கியும் எகிறும் அன்புமணி... ஆத்திரத்தில் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Jul 16, 2019, 12:34 PM IST
Highlights

சமீபத்தில் தான் அவர் அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி ஆனார். அன்புமணியின் இந்த செயல் பாஜக - அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  

புதிய கல்வி கொள்கை கருத்து இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை சுட்டிக்காட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

பாமகவின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் அக்கட்சியின் கொடியை அன்புமணி ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளது.

மக்களுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்ய பாமக குழு ஒன்றை அமைத்துள்ளது. குழுவின் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் அளிப்போம். நீட், எக்சிட் தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையம் உருவாகவே வழிவகுக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாஜக - அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது பாமக. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கடுமையாக அதிமுகவும்- பாஜகவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் இருந்து கொண்டே புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி ஆனார். அன்புமணியின் இந்த செயல் பாஜக - அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.  

click me!