இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதியுடன் தமிழர்களுக்கு தொடர்பு ! வெளியான அதிர்ச்சித் தகவல் !!

By Selvanayagam PFirst Published Jul 16, 2019, 11:45 AM IST
Highlights

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையே தீவிரவாதிகளுடன் தமிழகர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாக தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது; இதில் 250 க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். 
இந்த கொடூரத்தை மேற்கு ஆசிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் தலைமை ஏற்று நடத்திய 'தேசிய தவ்ஹீத் ஜமாத்' நிர்வாகி ஜஹ்ரான் ஹாஷிம் தமிழகத்தில் பதுங்கி இருந்தது என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை  மண்ணடி மற்றும் நாகப்பட்டினத்தில் சோதனை நடத்தப்பட்டது.
 
அப்போது, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகியோர் தடைசெய்யப்பட்ட “அன்சாருல்லா” என்ற இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்யும் நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து மதுரையை சேர்ந்த முகமது ஷேக் மொய்தீன் திருவாரூர் - அகமது அசாருதீன் சென்னை - தவுபிக் அகமது ஆகியோரை முதலில் பிடித்து விசாரித்தனர். 


பின் தேனியைச் சேர்ந்த முகமது அக்சர் மீரான் கனி; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த மொய்தீன் சீனி சாகுல் ஹமீது நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் ஆகியோரை பிடித்தனர்.

இதே போல  பெரம்பலுார் - குலாம் நபி ஆசாத் ராமநாதபுரம் - ரபிக் அகமது முன்தாப்சிர் பைஷல் செரீப்; திருநெல்வேலி - முகமது இப்ராஹிம் பாருக்; தஞ்சாவூர் - உமர் பாருக் ஆகியோரிடம் விசாரித்தனர். தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக செயல்பட்ட இவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது துபாய் போலீசாரின் விசாரணையில் உறுதியானது.

மேலும் இவர்களுக்கு இலங்கை தேவாலயங்களில் நிகழ்ச்த குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இது தமிழக மக்கள் மற்றும் போலீசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!