குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்..! பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிப்பு

By karthikeyan VFirst Published Mar 14, 2021, 8:27 PM IST
Highlights

குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.

பத்மநாபபுரம் தொகுதியை தவிர, அதிமுக போட்டியிடும் மற்ற அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜான் தங்கம் போட்டியிடுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

மேலும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் ராம பழனிசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!