6 தொகுதியில் போட்டியிட உள்ளவர்கள் யார்?... வெளியானது விசிக வேட்பாளர்கள் பட்டியல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 14, 2021, 7:39 PM IST
Highlights

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை, எவை என சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிகளாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைக்க உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு ஆகிய பணிகளை விரைவாக நடத்தி முடித்துவிட்டன. ​திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியம் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 

அதன் படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை, எவை என சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிகளாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையின் படி தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிட உள்ள 6 வேட்பாளர்கள் யார் என்பதை அறிவித்துள்ளார். 

1. நாகை - ஆளூர் ஷா நவாஸ்

2.காட்டுமன்னார் கோயில் - சிந்தனை செல்வன்
3.செய்யூர் - பனையூர் பாபு

4.வானூர் - வன்னி அரசு

5.திருப்போரூர் - எஸ்.எஸ் பாலாஜி

6.அரக்கோணம் - கவுதம சன்னா

click me!