வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி.. அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் வீடு.. பட்டையை கிளப்பும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Mar 14, 2021, 7:01 PM IST
Highlights

மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் மற்றும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் மற்றும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபரேவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அதிமுக இன்று  வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வாக்குறுதிகள்

* அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்

*  ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம்

*  விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்

*  குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.

*  அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம்

*  மகளிர் நலம் காக்கும் குலவிளக்குத் திட்டம் 

*  மகளிருக்கு பேருந்து சலுகை

*  ரேஷன் பொருள்கள் வீடு தேடிவந்து கொடுக்கப்படும்.

*  ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும்.

*  வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்

*  முதியோருக்கான ஊதியத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 -ஆக உயர்வு.

*  மத்திய அரசு பணிக்கு மாநில அளவிலான தேர்வு.

*  தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும்.

*  உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.

*  ஈழத்தமிழர் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவர்.

*  ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் நிரந்தரதீர்வு

*  காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு 

*  வேளாண் விளை பொருள் லாபகரமான விற்பனைக்கு வழிகாட்டும் அமைப்பு

*  பனைமரம் வளர்ப்பு

*  ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு

*  நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்

*  நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்

* மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்

* கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம்

* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்

* பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை

*  மாதம்தோறும் மின் கணக்கீட்டு முறை பின்பற்றப்படும்

* ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்

*  வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக்கப்படும்

* டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்.

* அனைத்து வழிபாட்டு தலங்களும் புனரமைக்கப்படும்.

click me!