#BREAKING அம்மா வாஷிங் மெஷின் திட்டம்... அசத்தலான அறிவிப்புகளுடன் வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 14, 2021, 06:38 PM IST
#BREAKING அம்மா வாஷிங் மெஷின் திட்டம்... அசத்தலான அறிவிப்புகளுடன் வெளியானது அதிமுக தேர்தல்  அறிக்கை!

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்த குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் - இபிஎஸிடம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே விவசாயிகள் கடன் ரத்து, மகளிர் கடன் மற்றும் விவசாயிகள் நகை கடன் தள்ளுபடி என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி வருடத்திற்கு 6 இலவச சிலிண்டர்கள், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என ஏற்கனவே எடப்பாடியார் அறிவித்திருந்தார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் கவர்ச்சிகரமான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1. அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்

2.வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி 

3.ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு போய் வழங்கப்படும்

4.அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் 

5.கல்விக்கடன் தள்ளுபடி 

6.மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை  என பல்வேறு அதிரடி திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்துள்ளன. 

PREV
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்