அதிமுக அரசின் சாதனைகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்ட திமுக, கட்சி தொண்டர்களே அதிர்ச்சி

By Asianet TamilFirst Published Mar 14, 2021, 6:06 PM IST
Highlights

திமுக தலைவர்  ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். சிலிண்டருக்கு நூறு ரூபாய்  மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, பால் விலை லிட்டருக்கு 3ரூ குறைப்பு என பல்வேறு துறைகள் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகளை  அறிவித்தார். ஆனால் அதிமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய அல்லது செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை, திமுக தங்களது தேர்தல் அறிக்கையில் சேர்த்திருப்பது தான் காமெடி.

திமுகவின் தேர்தல் அறிக்கையில்  அநேக வாக்குறுதிகள்  இடம் பெற்றிருந்தாலும், அதிமுக ஏற்கனவே அறிவித்து ,கொண்டு வந்த  நலத்திட்டங்களே அதிகம், அதில் சில  பின்வருமாறு  

*தமிழகமெங்கும் சுமார் 500 கலைஞர் உணவகம் துவங்கப்படும் - ஏற்கனவே தமிழகமெங்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் 2013 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  ஆட்சியில் அமைக்கப்பட்டது.

*மின் மோட்டார் வாகனம் வாங்குவதற்கு ரூ 10,000 மானியம் வழங்கப்படும் என வாக்குறுதியில் தெரிவித்தார் - மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இலவசமாக மின் மோட்டார் வாகனங்கள் 2012 முதல்  வழங்கப்பட்டு வருகிறது.

*குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார் - 2015 ல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த குடிசை மாற்று வாரியம் மூலம் வீட்டிற்கு ரூ1.20 லட்சம் செலவில் கான்கிரீட் வீடு கட்டித் தரப்பட்டது. மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழைஎளிய மக்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் இலவச கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என பிரச்சாரத்தின்போது அறிவித்தார்.

*குடிநீர் வாகனம் மூலம் விநியோகம் செய்வதை நிறுத்தி, குழாய்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகம்  செய்யப்படும் என் அறிவித்தார் - சுமார் 14 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு, 100% சதவிகிதம் அதை நிறைவேற்றியும் உள்ளது அதிமுக அரசு.

*ஆறுகளை தூர்வாரப்பட்டு சீரமைத்து அதனை பாதுகாக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் - அதிமுக அரசு வெளியிட்ட நடந்தைவாழி திட்டத்தின் பிரதான நோக்கம் காவிரி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை பாதுகாத்து, புத்துயிரளித்து  வளங்களை திறம்பட கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். மேலும், சமீபத்தில் காவேரி குண்டாறு திட்டம் திவக்கபட்டது, அத்திக்கடவு அவினாசி திட்டமும் நடைமுறையில் உள்ளது.

*கொரோனா காலத்தில் உயிர்களை இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார் - கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட அரசு  ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உரிய இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஏற்கனவே பல குடும்பங்களுக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.

*நீர்நிலைகள், ஏரிகள் போன்றவற்றை பராமரித்து பாதுகாக்க 10,000 கோடி செலவில் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் ஸ்டாலின் - அதிமுக அரசின் நட்சத்திர திட்டமான குடிமராமத்து திட்டத்தின் முக்கியத்துவமே நீர்நிலைகளான ஏரி, குளம், குட்டைகளை, கால்வாய் போன்றவைகளை பராமரிப்பது, பாதுகாப்பது தான் அதன் சாராம்சம். 

*அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் அமைக்கபடும் என  ஸ்டாலின் வாக்குறுதி அறிவித்தார் - அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் குறை கேட்கும் ஹெல்ப்லைன் நம்பர் 1100 மூலம் சுமார் 50 ஆயிரத்துக்கும்  அதிகமான கோரிக்கைகளை பெற்று, அதில் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்பட்டது. தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு கடிதம் மூலம் உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.மேலும்,2019 ஆண்டு மாவட்டம் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் குறைகள் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது

*இந்து யாத்ரீகர்கள் தங்கள் புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்காக தலா 25,000ரூ வழங்கப்படும் என்றார் - இந்து பக்தர்களின் பயணத்திற்கு 2012ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சுமார் ரூ 1.25 கோடி ஒதுக்கப்பட்டு, அதனை செயல்படுத்தியும் காட்டினார். 

மேற்குறிப்பிட்டது போல , அதிமுக அரசு ஏற்கனவே செயல்படுத்திய அல்லது அமலில் இருக்கும் நலத்திட்டங்களை திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டது வேடிக்கையான விஷயம். அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை அவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கிறது, திமுக அதிமுகவின் ஒவ்வோர் திட்டத்தையும் காப்பி அடித்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேர்தல் அறிக்கையையும் காப்பி அடிப்பதை என்னவென்று சொல்வது என்று அரசியல் வட்டாரம் எல்லி நகையாடி வருகிறது. 

திமுக தலைவர் அறிவித்த தேர்தல் அறிக்கைகள், ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு செய்த முதன்மையான திட்டங்களை அப்படியே சேர்த்துள்ளனர். வெறும் பெயரை மட்டும் மாற்றி புதிதாக அறிவிப்பது போல் திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அரசியல் வட்டாரத்திலும், எதற்கு ஏற்கனவே நிறைவேற்றிய அல்லது செயலிலிருக்கும் திட்டங்களை மீண்டும் புதிது போல் அறிவிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் மத்தியில் கேள்விகள் எழும்புகிறது. இதனால் திமுக தேர்தல் அறிக்கையின் மேலிருந்த எதிர்பார்ப்பென்பது சுக்குநூறாக உடைந்து விட்டது.

click me!