தவணை முறையில் 5 தேர்தல் அறிக்கைகள்” - தி.மு.கவின் சொதப்பல் வேலை

By Asianet TamilFirst Published Mar 14, 2021, 6:01 PM IST
Highlights

திமுக கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து முறை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. தி.மு.க நினைத்து நினைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதாகவும், கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தில் துணை தேர்தல் அறிக்கை, கூடுதல் தேர்தல் அறிக்கைகளை  வெளியிட்டு தி.மு.க புதுமை படைப்பதாகவும் நெட்டிசன்கள் ஸ்டாலினை வாட்டியெடுத்து வருகின்றனர்.

திமுக கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து முறை தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. தி.மு.க நினைத்து நினைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதாகவும், கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தில் துணை தேர்தல் அறிக்கை, கூடுதல் தேர்தல் அறிக்கைகளை  வெளியிட்டு தி.மு.க புதுமை படைப்பதாகவும் நெட்டிசன்கள் ஸ்டாலினை வாட்டியெடுத்து வருகின்றனர்.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு டி.ஆர். பாலு தலைமையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்தனர். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக் கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் தி.மு.க செயல்படுத்தவுள்ள திட்டங்களை ஸ்டாலின் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது, தேர்தல் அறிக்கையின் முக்கிய விஷயங்களை பட்டியலிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ஏதும் குறிப்பிடப்படாததால்  கூட்டணியில் உள்ள சிறுபான்மையினர் கட்சிகள் தி.மு.கவிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து அவசர அவசரமாக இணைப்பு தேர்தல் அறிக்கையை ஒரு நாள் பிறகு திமுக வெளியிட்டது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து முறை மாற்றி மாற்றி தேர்தல் அறிக்கைகளை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதனை சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். நினைத்து நினைத்து தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார் ஸ்டாலின் என்றும், அவரை பார்க்க வருபவர்களிடம் கேட்டு கேட்டு அதனை தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும்,வெளியிட்ட 5 அறிக்கைகளையும், ஒரே தேர்தல் அறிக்கையாக வழங்கவேண்டும் என சில செய்திகள்கள்/பத்திரிக்கையாளர்களும் திமுகவிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

தி.மு.கவின் வரலாற்றில் இல்லாத வகையில் தேர்தல் அறிக்கைகளில் துணை அறிக்கைகள் வெளியிட்டு அதன் மூலம் ஸ்டாலின் சாதனை படைத்து வருவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றர்.

click me!