திட்டக்குடியை தட்டித்தூக்க போகும் பாஜக... ‘தடா’வை இறக்கி தடாலடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 14, 2021, 5:01 PM IST
Highlights

இதில் குறிப்பாக தனித் தொகுதியான திட்டக்குடியில் திமுக வேட்பாளரை எதிர்த்து யாரை களமிறக்க உள்ளது பாஜக என்பதை அனைவரும் உற்று நோக்கி வந்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் 14 தொகுதிகளில் திமுக - பாஜக நேருக்கு நேர் மோத உள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலின் படி, 1. ராமநாதபுரத்தில் - காதர் பாட்சா, 2.விருதுநகரில் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், 3.மதுரை வடக்கு - தளபதி, 4.நாகர்கோவிலில் - சுரேஷ் ராஜன், 5.நெல்லையில் - லட்சுமணன், 6.திருவையாறில் - துரை சந்திரசேகரன், 7.திட்டக்குடியில் - சி.வி கணேசன், 8.ஆயிரம் விளக்கில் - டாக்டர் எழிலன், 9.துறைமுகத்தில் - பி.கே.சேகர், 10. மொடக்குறிச்சியில் - சுப்புலட்சுமி ஜெயதீசன், 11.அரவக்குறிச்சியில் - இளங்கோ,  12. தாராபுரத்தில் - கயல்விழி செல்வராஜ், 13.திருக்கோவிலூரில் - க.பொன்முடி உள்ளிட்டோரை பாஜக வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர். 

இதில் குறிப்பாக தனித் தொகுதியான திட்டக்குடியில் திமுக வேட்பாளரை எதிர்த்து யாரை பாஜக களமிறக்க  உள்ளது என்பதை அனைவரும் உற்று நோக்கி வந்தனர். ஏன் என்றால் திட்டக்குடியைப் பொறுத்தவரை 2006 மற்றும் 2016ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் திமுக சார்பில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சி.வி.கணேசன் போட்டியிட உள்ளார். பிற தொகுதிகளைப் போலவே இங்கும் பலம் வாய்ந்த வேட்பாளரை களமிறங்கினால் மட்டுமே வெற்றி கிட்டும் எனக்கூறப்பட்டது. 

இந்நிலையில் இன்று பாஜக வெளியிட்டுள்ள 17 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலின் படி மூத்த பட்டியலின தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி திட்டக்குடி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் நக்சல்பாரி அமைப்பில் இணைந்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை வரை சென்று திரும்பியவர் தடா பெரியசாமி. பட்டியலின மக்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடங்கியதே இவர் தான். தற்போது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரான தடா பெரியசாமி பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும், நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். 

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட விவகாரத்தில், திமுக தரப்பில் வெளியிடப்பட்ட மூலப்பத்திரம் போலியானது என உண்மையை வெளியிட்டு ஸ்டாலினையே அலறவைத்தவர். மேலும் வர உள்ள தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தவர்களுக்கா உங்கள் வாக்கு? என திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்றும் உறுதி பூண்டிருந்தார். பட்டியலின மக்களின் பஞ்சமி நில மீட்புக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தடா பெரியசாமியை திட்டக்குடி தனி தொகுதியில் பாஜக களமிறங்கியுள்ளதால் பஞ்சமி நில விவகாரத்தில் சிக்கித் சீரழித்த திமுக இப்போதே அதிர்ச்சி அடைந்துவிட்டதாம். 
 

click me!