அட்ரா சக்க.. இன்று மாலை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு.. அமமுக-தேமுதிக கூட்டணி உறுதி.. அலறும் அதிமுக..!

By vinoth kumarFirst Published Mar 14, 2021, 4:18 PM IST
Highlights

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இடையே அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு இடையே அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விஜயகாந்த் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இதனையடுத்து, அமமுகவுடன் ரகசிய பேச்சுவார்தையை தேமுதிக நடத்தி வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அமமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் தனித்து போட்டியிடுவதை விட, கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், அமமுகவுடன் தேமுதிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அமமுக - தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேமுதிகவுக்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில், தேமுதிக அளித்துள்ள விருப்பத் தொகுதிகளில் 35 தொகுதிகளை அமமுக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று மாலை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!