6 தொகுதிகளில் களமிறங்குவது யார்?... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 14, 2021, 03:52 PM IST
6 தொகுதிகளில் களமிறங்குவது யார்?... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...!

சுருக்கம்

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைக்க உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி ஒதுக்கீடு ஆகிய பணிகளை விரைவாக நடத்தி முடித்துவிட்டன. ​திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியம் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. 


அதன் படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பவானிசாகர் (தனி),  வால்பாறை (தனி), சிவகங்கை, திருப்பூர் வடக்கு
 திருத்துறைப்பூண்டி (தனி), தளி ​ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். 

1. திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து 
2.தளி - ராமச்சந்திரன் 
3.பவானிசாகர் -  சுந்தரம் 
4.வால்பாறை - ஆறுமுகம் 
5.சிவகங்கை - குணசேகரன் 
6.திருப்பூர் வடக்கு -  ரவி


 

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Assembly Election Results 2026 Live.. தமிழக அரசியலில் கிங் மேக்கராகும் விஜய்..? தனிப்பெரும்பான்மைக்கு ஆப்பு..?
எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!