அதிமுகவை பதற வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்... ஆட்சியை தக்க வைக்க மோடி கொடுத்த ஐடியா..!

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2019, 5:15 PM IST
Highlights

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சாதாரண மக்களும் இந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். 
 

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலும், 18 தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி சாதாரண மக்களும் இந்த தேர்தல் முடிவுகளுக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். 

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிதாக அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் இந்தத் தேர்தலில் களமிறங்கி உள்ளதால் ஓட்டுகள் பிரியும் என்பதால் தேர்தல் முடிவில் மாற்றங்கள் வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.   

மேலும் வரும் மே 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இன்று தமிழக  அரசியலில் ஒரு பரபரப்பு செய்தி வந்து கொண்டிருக்கிறது. தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏ க்களும் மற்றும் மனித நேய ஜனநாயக கட்சி  எம்.எல்.ஏ  தமிமுன் அன்சாரி ஆகிய நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அரசு தலைமை கொறடா கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதன் பின்னணி என்னவென்று விசாரித்த போது தேர்தலுக்கு பின் வந்த கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு பின்னடைவு உள்ளதாக உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் சென்றுள்ளதாகவும் அதனால் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்ற கணக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்க ஆளும் தரப்பு தயாராகிவிட்டது என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள். இன்னும் ஒரு சிலர் நேற்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓபிஸ், வாரணாசியில் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்தார். அதனைத் தொடர்ந்தே நான்கு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

click me!