
அதிமுக பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன ?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியை விட்டு நீக்குவது உள்ளிட்ட 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சுமார் 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 2,140 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்துக்கு வந்துள்ளனர்.
பொதுக்குழுவிற்கு 95 சதவீதம் உறுப்பினர்கள் வருகை தந்து உள்ளனர்.
இந்த பொதுக்குழுவில் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தந்து உள்ளனர்.
இன்று காலை சரியாக 10.35 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் நிலையில் சசிகலா, தினகரன் ஆகியோரை கட்சியைவிட்டு நீக்குவது, கட்சியை வழி நடத்திச் செல்ல வழிகாட்டும் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்குவது என 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றும் சற்று நேரத்தில் தீர்மான விவரங்கள் வெளியாகவுள்ளன.