ஆளும் கட்சி எடுத்த அதிரடி எக்ஸிட் போல் ! அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் ?

Published : Apr 25, 2019, 08:39 PM IST
ஆளும் கட்சி  எடுத்த அதிரடி  எக்ஸிட் போல் !  அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் ?

சுருக்கம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக  தனியார் நிறுவனம் ஒன்று தேர்தல் நாளன்று எக்ஸிட் போல் ஒன்றை நடத்தியது அதன் ரிசல்ட் தற்போது முதலமைச்சர் கைகளில் இருப்பதாகவும், அதில் அவருக்கு திருப்தியான பதில் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்ததில் இருந்து தமிழகத்தில் திமுக – அதிமுக கூட்டணிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் நாளன்று  ஆங்கில சேனல்கள், தனியார் நிறுவனங்கள் என பல கம்பெனிகள் நாடு முழுவதும் எக்ஸிட் போல் நடத்தியது. அதாவது வாக்களித்த பின் வாக்களர்களிடம் மீண்டும் வாக்குப்பெடுப்பு நடத்தி விவரங்களை சேகரித்து கணக்கிடுவது.

இந்த எக்ஸிட் போல் முடிவுகளை  7 ஆவது கட்ட தேர்தல்கள் முடிந்தபின்தான் பொது வெளியில் வெளியிட முடியும். ஆனால் அரசியல் கட்சிகள் தாங்கள் தனியாக நிறுவனங்களை நியமித்து எக்ஸிட் போல் எடுத்துக் கொள்ளலாம்.

அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தரவுப்படி  துணை சபாநாயகர் தம்பிதுரையின்  அறிவுறுத்தலின்படி மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதி எக்ஸிட் போல் நடத்தியது.

அதன் முடிவுகள் தற்போது எடப்பாடி பழனிசாமி கைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அமைச்சர்களிடையே இந்த எக்ஸிட் போல் ரிப்போர்ட் குறித்துதான் பேச்சாக உள்ளது என கூறப்படுகிறது.

அந்த எக்சிட் போல் ரிசல்ட்டில் 14 முதல் 17 மக்களவை இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அது எந்தெந்த இடங்கள் என்பதும் தெரிவிக்கபட்டிருந்தது. 

அதன்படி அதிமுக அணி வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் ஓ.பன்னீ்ா செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதி இடம்பெறவில்லையாம். ஆனால் தம்பிதுரை ஜெயிப்பார் என்றும் அந்த எக்சிட் போல் ரிசல்ட்டில் வந்திருந்ததாம்.

மும்பை நிறுவனத்தின் இந்த எக்ஸிட் போல் ரிப்போர்ட்டை நம்புவதா? வேண்டாமா ? என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!