சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாய்ச்சல்

By manimegalai aFirst Published Sep 27, 2021, 12:03 PM IST
Highlights

50 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறும் தி.மு.க. அந்த பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

50 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறும் திமுக அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கபப்ட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று பட்டியலை வெளியிட வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியில் 50 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுவது,  சிறு குழந்தைகளின் ஆசை தோசை விளையாட்டு போல உள்ள்தாகவும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் கொலைகள், ரவுடிகளின் கைது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைதி தவழும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சீர்கெட்டு விட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரச்சினைகள் குறித்து புகார் அளிக்க வருபவர்கள் தீக்குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள ஜெயக்குமார், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

 

 

click me!