முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளிப்பு.. படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!

By vinoth kumarFirst Published Sep 27, 2021, 11:57 AM IST
Highlights

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு 40 வயது மதிக்க தக்க ஒருவர் வந்திருந்தார். அப்போது, அவர் திடீரென கையில் வைத்திருந்த  மண்ணெண்ணெய் மேலே ஊற்றி  தீக்குளிப்பில் ஈடுபட்டார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி அணைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு 40 வயது மதிக்க தக்க ஒருவர் வந்திருந்தார். அப்போது, அவர் திடீரென கையில் வைத்திருந்த  மண்ணெண்ணெய் மேலே ஊற்றி  தீக்குளிப்பில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனையடுத்து, 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு காயமடைந்த அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தீக்குளிப்பில் ஈடுபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மதிமுக பிரமுகர் வெற்றிவேல் என்பது தெரியவந்தது. இவர் உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதையடுத்து சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரை  வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி முதல்வர் இல்லம் முன்பு தீக்குளித்துள்ளார். 

இந்த சம்பவம் முதல்வர் புறப்பட்ட  30 நிமிடம் முன் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 40% தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்வாகியை சந்திக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

click me!