அதிமுகவுக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போடலைன்னு புரியலையே... வேலூரில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்த குழப்பம்!

By Asianet TamilFirst Published Jul 29, 2019, 10:25 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக கனவு காண்கிறார். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராகவே முடியாது. அதிமுக ஆட்சியில் அடிமட்ட தொண்டன்கூட முதல்வராகிவிட முடியும். திமுகவில் அது போல நடக்குமா?

அதிமுகவுக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை எனப் புரியவில்லையே என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் என்று தெரிவித்தார். 
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்டுவரும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வேலூரில் பல்வேறு பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அதிமுகவுக்காகப் பணியாற்றியவர் ஏ.சி.சண்முகம். அவரை வேலூர் தொகுதியில் நாம் வெற்றி பெற வைக்க வேண்டும். கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது காவிரி தண்ணீரை அவரால் பெற்றுத்தரவே முடியவில்லை. ஆனால், அதிமுக ஆட்சியில்தான் காவிரி பிரச்னையை ஜெயலலிதா தீர்த்துவைத்தார். 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக கனவு காண்கிறார். அவர் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் அவரால் முதல்வராகவே முடியாது. அதிமுக ஆட்சியில் அடிமட்ட தொண்டன்கூட முதல்வராகிவிட முடியும். திமுகவில் அது போல நடக்குமா? மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டங்களையும் அதிமுக அரசு அனுமதிக்காது. இருந்தபோதும் அதிமுகவுக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போடவில்லை என்பதுதான் புரியவில்லை. ஸ்டாலின் எப்போதும் பொய்யை மட்டுமே பேசி வருகிறார். அவர் என்ன பேசினாலும் திமுகவை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்” என ஓபிஎஸ் விமர்சனம் செய்து பேசினார். 

click me!