அதிமுக - பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை... கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்!!

By Narendran SFirst Published Feb 5, 2023, 9:00 PM IST
Highlights

பாஜகவை ஆதரிக்கும் எந்த கட்சியும் வெற்றி பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலபகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பாஜகவை ஆதரிக்கும் எந்த கட்சியும் வெற்றி பெறாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலபகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. எதிரணியினர் வேட்பாளரை கூட நிறுத்த முடியாமல் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பம் இறுதி வரையில் நீடிக்கும் என நினைக்கிறேன். அதிமுக - பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை போன்றது. அது என்றும் தெளியாது. அதிமுக ஒன்றிணைவதை பாஜகவினர் விரும்ப மாட்டார்கள். அந்தக் கட்சியை அழித்து அதன் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க: நெல்கொள்முதல் விதிகளில் தளர்வு வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இது தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும். சுதந்திரமாக வேட்பாளரை கூட அறிவிக்க முடியாத நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா தலைவரா அண்ணாமலை தலைவரா என்பது கூட தெரியாத அளவிற்கு அவர்களின் செயல்பாடு உள்ளது. ஒவ்வொரு விஷயத்திற்கும் அண்ணாமலையிடம் போய் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்தை கேட்டு வருகின்றனர். பாஜகவை ஆதரிக்கும் பாஜகவிற்கு காவடி தூக்கும் எந்த கட்சியும் வெற்றி பெறாது.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு என்ன பொறுப்பு.? உச்சநீதிமன்ற உத்தரவு எங்கே.? கடுப்பான ஓபிஎஸ் - குழப்பத்தில் அதிமுகவினர்!

அந்த நிலையில் உள்ள அதிமுக எப்போதும் இனி வெற்றி பெறாது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் வைப்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே வேலையில் அரசு இந்த விவகாரத்தில் சர்ச்சைக்கு இடம் இல்லாத வகையில் பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கருணாநிதிக்கு நினைவுச் சின்னத்தை வைக்க வேண்டும், அதுதான் எங்களது நிலைப்பாடு. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சர்ச்சை இல்லாத வகையில் நினைவு சின்னத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

click me!