AIADMK: எடப்பாடிக்கு என்ன பொறுப்பு.? உச்சநீதிமன்ற உத்தரவு எங்கே.? கடுப்பான ஓபிஎஸ் - குழப்பத்தில் அதிமுகவினர்!

By Raghupati RFirst Published Feb 5, 2023, 6:03 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும், அதில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களத்தில் சூட்டினை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் தரப்பில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோருக்கு படிவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்படிவத்தில், எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுவை முன்மொழிந்துள்ளார். அவரை தேர்ந்தெடுக்க சம்மதம் எனில் ஒப்புதல் அளிக்கிறேன் என்றும் இணைக்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும். வேறொரு வேட்பாளரை தேர்ந்தெடுக்க விருப்பம் இருந்தால் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட இடத்தில் தெரிவித்து அதை 5.02.2023 அன்று இரவு 7 மணிக்குள் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். அதன்படி,  பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நேற்று கடிதம் மற்றும் படிவங்களை அனுப்பினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையும் படிங்க..பேஷன் ஷோ நிகழ்ச்சியில் ‘திடீர்’ குண்டு வெடிப்பு.. நடிகை சன்னி லியோனுக்கு என்ன ஆச்சு.? வெளியான உண்மை தகவல்!

மேலும் அதிமுக வேட்பாளர் தேர்வு படிவத்தையும் அவர் அனுப்பியுள்ளார். இன்று இரவு 7 மணிக்குள் பதில் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து எதுவும் இல்லாததால், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத்தலைவர் செயல்படவில்லை என்றும்,  இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம்  என்றும் கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுக உட்கட்சி பிரச்னை எப்போது முடியும் என்பது இப்போது வரை மர்மமாக உள்ளது.

இதையும் படிங்க..ரிலீசுக்கு முன்பே ரூ.246 கோடியா!.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணின்னா சும்மாவா.! லியோ செய்த சாதனை!

இதையும் படிங்க..அந்த 8 நாட்கள்!.. இபிஎஸ் Vs ஓபிஎஸ் இணைப்பு உண்மையா.? பல்டி அடித்த அண்ணாமலை - பின்னணி என்ன.?

click me!