18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் … அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு….. ஓபிஎஸ் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Mar 18, 2019, 12:26 AM IST
Highlights

தமிழகத்தில் வரும் ஏபரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள 18 சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
 

அதிமுக சார்பில் 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் டி.டி.வி.தினகரனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இது தொடர்பான வழக்கில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டது.

இதனிடையை திருவாரூர் தொகுதி உறுப்பினர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் உறுப்பினர் ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்தனர். இதனால் அந்த தொகுதிகளுக்கும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சராயிருந்தவருமான பாலகிருஷ்ணா ரெட்டி நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  


ஆக மொத்தம் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. 

ஆனால் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் இருப்பதால் அந்த மூன்று தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள  18 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவக்கப்பட்டுள்ளனர். அதன்படி
பூந்தமல்லியில் ஜி வைத்தியநாதனும், பெரம்பூரில் ஆர்.எஸ்.ராஜேஷும், திருப்போரூரில் எஸ்.ஆறுமுகம், சோளிங்கரில் ஜி சம்பத்தும், குடியாத்தத்தில் கஸ்பா ஆர்.மூர்த்தியும், ஆம்பூரில் ஜே.ஜோதிராமலிங்கராஜாவும், ஓசூரில் சத்யாவும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமியும்,


அரூரில் சம்பத்குமாரும், நிலக்கோட்டையில் தேன்மொழியும், திருவாரூரில் ஜீவானந்தமும்,  தஞ்சாவூரில் ஆர்.காந்தியும், மானாமதுரையில் நாகராஜனும், ஆண்டிப்பட்டியில் லோகிராஜனும், பெரிய குளத்தில் முருகனும், சாத்தூரில் ராஜவர்மனும், பரமக்குடியில் சதன் பிரபாகரும், விளாத்திகுளத்தில் சின்னப்பனும்  போட்டியிடுகின்றனர். 

click me!