அடித்துப் பிடித்து மீண்டும் சீட் வாங்கிய தம்பிதுரை …. அதிமுக எம்.பி. தொகுதி வேட்பாளர் வெளியீடு !!

By Selvanayagam PFirst Published Mar 17, 2019, 11:12 PM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு அறிவித்துள்ளார். . சீட் கிடைக்குமா ? கிடைக்காதா ? என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தம்பிதுரைக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் யார் யார் ?


 
சேலம்- சரவணன் 
நாமக்கல்- காளியப்பன் 
கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி 
ஈரோடு- ஜி மணிமாறன் 
கரூர்- தம்பிதுரை 
திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன் 
பொள்ளாச்சி- மகேந்திரன் 
ஆரணி- செஞ்சி ஏழுமலை 
திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி 
சிதம்பரம் (தனி)- சந்திரசேகர் 
பெரம்பலூர்- என் ஆர் சிவபதி 
தேனி- ரவீந்திரநாத் 
மதுரை- ராஜ் சத்யன் 
நீலகிரி (தனி)- தியாகராஜன் 
திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன் 
நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன் 
மயிலாடுதுறை- ஆசைமணி 
திருவள்ளூர் (தனி)- வேணுகோபால் 
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல் 
தென் சென்னை- ஜெயவர்த்தன்

நாடாளுமன்றத்தன் இறுதி நாட்களில் அதிமுக எம்.பி.யும். துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடியை மிகக் கடுமையாக பேசியதால் அவருக்கு சீட் கிடைக்குமா ? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தம்பிதுரை வெற்றிகரமாக கரூர் தொகுதியை மீண்டும் போராடிப் பெற்றுள்ளார். 

click me!