ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல் வெடித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கே.எஸ். தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்தார்.
undefined
இதையும் படிங்க;- இது கபட நாடகம்.! “கோழைத்தனம்” திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராக மாறிய கமல்.. கடுப்பான அதிமுக
இதனிடையே அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. இதில், எடப்பாடி பழனிச்சாமியின் தென்னரசுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில் ஓபிஎஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார். இந்நிலையில், கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக ஓ.பி.எஸ். அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 பேர் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- திமுகவை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ், ஆட்ட களத்தில் இல்லை.! நாக் அவுட் ஆகி விட்டார்- ஜெயக்குமார் கிண்டல்
இதற்கான கடிதத்தை ஓ. பன்னீர்செல்வத்துக்கு அவர்கள் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்தும், அறிவித்த வேட்பாளரையும் திரும்ப பெற்றதால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று காலை சென்னையில் செய்ததியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.