AIADMK : அதிமுகவின் வாரிசு யார்? அதென்ன ஓபிஎஸ், இபிஎஸ்.. கடுப்பான நீதிபதிகள் - சைலன்ட் ஆன அதிமுக

By Raghupati RFirst Published Jan 4, 2023, 5:23 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

அதிமுக பொதுக்குழு

சென்னை, வானகரத்தில் ஜூலை 11ம் தேதி  நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்தது.நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ம் தேதி அளித்த தீா்ப்பில், ஜூலை 11 அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாா்.

எடப்பாடி பழனிசாமி

இதனை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கலான மேல்முறையீடு மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீா்ப்பை ரத்து செய்ததுடன், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீா்ப்பளித்தனர்.

இதையும் படிங்க..Pudukkottai : நீங்களா ஏன் இங்க குளிக்கிறீங்க.? புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை.. மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

ஓ.பன்னீர்செல்வம்

இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம், பி.வைரமுத்து தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி, அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. 

நீதிபதிகள் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே என்றும், அதிமுக பொதுக்குழு வழக்கில் அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஓபிஎஸ் Vs இபிஎஸ் அர்த்தம்

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அனைத்தும் ஒரே கோரிக்கையை வலியுறுத்துபவையா ?, வழக்கு தொடர்ந்தவர்கள் யார்? யார் ? , என்னென்ன பொறுப்பு வகிக்கிறார்கள் ?, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என்று நீதிபதிகள் கேட்டனர்.

இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியவற்றுக்கு விளக்கம் கொடுத்தனர். இடைக்கால பொதுச்செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஒத்திவைப்பு

விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று தெரிவிக்க, பொதுக்குழு வழக்கு விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என்று கூறி விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க..Chidambaram : ரூ.1,000 வேணுமா.? திமுக மாதிரி நாம கொள்ளையடிக்கணும்.. சர்ச்சையை கிளப்பிய ப.சிதம்பரம்

click me!