மோடியின்  நெருங்கிய நண்பர் அதானியின் மருத்துவமனையில் 5 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு!  அதிர்ச்சி தகவல்….

Asianet News Tamil  
Published : May 27, 2018, 07:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
மோடியின்  நெருங்கிய நண்பர் அதானியின் மருத்துவமனையில் 5 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு!  அதிர்ச்சி தகவல்….

சுருக்கம்

adani hospital 111 child death in 5 months

குஜராத்தில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நடத்தும்ஜி.கே மருத்துவமனையில் கடந்த5 மாதங்களில் மட்டும் சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து விசாரிக்க அம்மாநில அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும்அறக்கட்டளையானது ஜி.கே என்ற அரசுமருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வருகிறது. இங்கு 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மே 20-ஆம் தேதி வரை சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 18, 19 சதவிகிதங்களில் இருந்து, தற்போது, இறப்பு விகிதம் 14 சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ராவ் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின்இறப்பு விகிதம் 21 சதவிகிதமாக இருந்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். கர்ப்ப காலங்களில் சத்தானஉணவு கிடைக்காதது, தாமதமாக மருத்துவமனைக்கு வருவது ஆகியவையே குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக வல்லுநர் குழுவிசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!