தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் மாநில அரசோட பிரச்சனை…. மத்திய அரசு என்ன செய்ய முடியும் ?  முதன் முதலாய் வாய் திறந்த அமித்ஷா!!

First Published May 27, 2018, 6:26 AM IST
Highlights
sterlite gun fire is state problem told amithsha


ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித்ஷா இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் உள்ள பாஜக  ஆட்சியின் 4 ஆண்டுகால செயல்பாடுகள் குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நிருபர்கள், காவிரி மேலாண்மை வாரியம்,தூத்துக்குடி துப்பாக்கி சூடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பினர்

தூத்துக்குடியை பொறுத்தவரை அங்கு துப்பாக்கி சூடு நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கும் கண்டித்து இருந்தார். பிரதமர் மோடியும் மிகவும் வேதனைப்பட்டார். சட்டம்–ஒழுங்கு மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினை என தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து உள்துறை இலாகா தமிழக அரசிடம் அறிக்கை கேட்டது. அதன்படி தமிழக அரசு அறிக்கை அளித்து இருக்கிறது. அந்த அறிக்கையின் மீது உள்துறை இலாகா கேள்வி எழுப்பும் எனவும் அமித்ஷா தெரிவித்தார்..

உச்சநீதிமன்றத்தில் காவிரி குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானது குறித்த  கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால்  காவிரி விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

click me!