ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை அலற விட்ட  பிரிட்டன் லேபர் பார்ட்டி !!  கோர முகம் காட்டும் வேதாந்தா குரூப் பங்குகளை தூக்கி எறிங்க !!

First Published May 27, 2018, 7:25 AM IST
Highlights
anil agarwal company share will be ban in londonshare market


ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும பங்குகளை லண்டன் பங்குச் சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், உலகின் கவனத்தை தூத்துக்குடியின் மீது திருப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் கோர முகத்தையும் அதுஅம்பலப்படுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட்ஆலையை உடனடியாக மூட வேண்டும்என்று உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரத்து குரலெழுப்பத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியான பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் செயல்தலைவருமான ஜான் மெக்டோனெல்லும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்.‘

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்றும் கூறியிருக்கும் அவர், ‘ஸ்டெர் லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா குழும பங்குகளை லண்டன்பங்குச் சந்தையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ எனவும் வலி யுறுத்தியுள்ளார்.

இந்தியா, ஜாம்பியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் வேதாந்தா நிறுவனம், தனது ஆலைகளுக்காக பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது என குற்றம்சாட்டியிருக்கும் மெக்டோனெல், சர்வதேச அளவில் விதிமீறலில் ஈடுபடும் வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து டிலிஸ்ட் செய்து அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்; இங்கிலாந்து அரசு, அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கண்டனகுரல்கள் வலுத்து வரும் நிலையில்,பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தகோரிக்கை, வேதாந்தா குழுமத்திற்கும் அனில் அகர்வாலுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வேதாந்தா குழுமத்தின் முதலாளி அனில் அகர்வால் லண்டனில்தான் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சில நாட்களுக்கு முன்பு,அனில் அகர்வாலின் லண்டன் வீட்டை முற்றுகையிட்டு அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அனில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அங்குள்ள இந்திய தூதரகத்தின் மனுவும் அளித்ததுடன், இங்கிலாந்து நாட்டுஎம்.பிக்களை சந்தித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டினர். இந்நிலையிலேயே, இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சியான பிரிட்டன் தொழிலாளர் கட்சி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பங்குச் சந்தையிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறுவது, வேதாந்தா குழுமத்திற்கு எதிரான வெளிநாட்டு சதி என்று அனில் அகர் வால் அலறியுள்ளார்.இந்தியப் பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் ‘செபி’ அமைப்புக்கு, வேதாந்தா குழுமம் தற்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல்இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிரஆலை யூனிட்-1, தமிழக அரசின் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அனுமதி மறுப்புகாரணமாக, நிறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

click me!