ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுறேன்னாரா மோடி? பொங்குகிறார் தமிழிசை! 

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுறேன்னாரா மோடி? பொங்குகிறார் தமிழிசை! 

சுருக்கம்

actual video from that rally which everyone mentionshe never promised 15L in every account

ஒவ்வொருவரோட வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொன்னாரா? இப்படி நிறையப் பேர் சமூக வலைத்தளங்களில் பொய்யுரை பரப்புகிறார் என்று டிவிட்டரில் பொங்கியிருக்கிறார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். 

தனது டிவிட்டர் பதிவில்,  வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் ரூ.15லட்சம் போடும் அளவுக்கு பதுக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறினார் என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, 2ஜி ஊழல் விஞ்ஞானிகள் என திமுக., வினரை விமர்சித்துள்ள தமிழிசை, திமுக., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அவ்வப்போது தகுந்த பதிலடியும் கொடுத்து வருகிறார். அண்மைக் காலமாக ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசையும் மோடியையும் விமர்சித்து வருகிறார். பிரதமர் மோடி ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாகக் கூறினார் எனப் பேசி வந்தார்.  இதற்கு பதிலளிக்கும் வகையில்  தமிழிசை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள்...

வெளிநாட்டில் கறுப்பு பணம் ஒவ்வொருவருக்கும் 15லட்சம் போடும் அளவிற்கு பதுக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டு வருவோம் என்று தான் பிரதமர் மோடி கூறினார். மோடி உரை... 

இந்தஉரையைதிரித்துக்கூறி உங்கள்ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் 15 லட்சம்போடுவதாக மோடி சொன்னாரே என பொய்ப்பிரச்சாரம் செய்யும் 2ஜி ஊழல் விஞ்ஞானிகள்... என்று குறிப்பிட்டுள்ள தமிழிசை, மோடியின் வீடியோவை ஸ்டாலின் அவரின் இந்தி படித்த குழந்தைகளிடம் காட்டச் சொல்லிக் கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!