ரஜினியை ’யாரு அவரு?’ எனும் ரேஞ்சுக்கு அலட்சியமாக டீல் பண்ணிய கமல்ஹாசன் பொண்ணு: தனுஷ் மனைவி மீதான டென்ஷன் தான் காரணமா?

By Vishnu PriyaFirst Published Jan 21, 2020, 6:09 PM IST
Highlights

என்னோட அப்பா திறமையானவர், நிச்சயம் ஜொலிப்பார்.” என்று பேசினார். இதைத்தான் எடுத்து வைத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்....”ரஜினியை யாரோ மாதிரியும், அப்படியொரு நபரை தெரியவே தெரியாது!ங்கிற மாதிரியும் ஸ்ருதி பேசியிருக்கிறார். 

தமிழக அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை ‘கருமம்! எல்லாம் தலையெழுத்துடா!’ என்று சொல்லி தலையிலடிக்கவா? அல்லது ’தலைமுறை மாற்றம்’ என்று சொல்லி,  கடந்து செல்லவா என தெரியவில்லை. அந்தளவுக்கு  புதுசு புதுசாக யாரெல்லாமோ வந்து என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசியல் அரங்கில். அந்த வகையில் இப்போது ரஜினிகாந்தை ‘யாருங்க அவரு? எனக்கு அப்படியொரு மனுஷன தெரியவே தெரியாது!’ எனும் ரேஞ்சுக்கு மிக அலட்சியமாக கமல்ஹாசனின் பொண்ணு ஸ்ருதிஹாசன் பேசியிருப்பதுதான் தமிழக அரசியல் மற்றும் சினிமா அரங்கில் பரபரப்பாகி இருக்கிறது. 
இன்னாபா பிராப்ளம்?....மதுரையில், ஒரு பிரபல நகைக்கடை ஒன்றை திறந்து வைக்க வந்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.  அப்போது நிருபர்களிடம் அவர் பேட்டி அளிக்கையில் சினிமா தாண்டி, அரசியலும் பேசினார்.  அப்போது ரஜினி தரப்பை செம்ம அலட்சியமாக ஸ்ருதி போட்டுத் தாக்கியதுதான் அதிர்ச்சியே.


 

ஸ்ருதி பேசியது இதுதான்...” என் அப்பா கூட அரசியல்ல கரம் கோற்பேனா?ன்னு கேக்கிறாங்க. என்னோட அதரவு எப்போதுமே என் அப்பாவுக்கு உண்டு. நான் சின்ன பொண்ணாக இருந்ததில் இருந்து அவரை கவனிச்சுட்டு வர்றேன். அவருக்கு சமூக அக்கறையும், அரசியல் தெளிவும் இருக்குது. ஆனால் எனக்கு அந்த தெளிவெல்லாம் கிடையாது. அதனால அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது. என்னோட சினிமா துறையில் என்ன சாதிக்கலாம், எப்படி சாதிக்கலாம் அப்படிங்கிறதுதான் என்னோட ஒரே எண்ணம்.  

அரசியலில் என் அப்பாவும், ரஜினியும் இணைவார்களா?ன்னு கேட்கிறாங்க. நான் என்னோட அப்பாவை பற்றித்தான் பேச முடியும், அதுதானே சரியாக இருக்கும். ’மற்றவங்களை’ப் பற்றி  எனக்கு தெரியாது. என் அப்பாவுக்கு இருக்கும் சமூக அக்கறைக்கு அவர் அரசியலில் நிச்சயம் பெரிய இடத்துக்கு வரணும், அவர் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்னு நம்புறேன். 
அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தால்  வெற்றி கிடைக்குமா?ன்னு கேட்கிறாங்க. அதையெல்லாம் சொல்றதுக்கு நான் ஜோஸியரோ, அரசியல் விமர்சகரோ கிடையாது. என்னோட அப்பா திறமையானவர், நிச்சயம் ஜொலிப்பார்.” என்று பேசினார். 


இதைத்தான் எடுத்து வைத்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்....”ரஜினியை யாரோ மாதிரியும், அப்படியொரு நபரை தெரியவே தெரியாது!ங்கிற மாதிரியும் ஸ்ருதி பேசியிருக்கிறார். ஸ்ருதி பிறக்குறதுக்கு முன்னாடி இருந்தே ரஜினியும், கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். இப்பவும் தினமும் டச்லேயே  இருக்கிறாங்க. கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிடுச்சு. இப்படிப்பட்ட நிலையில், ரஜினியை யாரோங்கிற மாதிரி ஸ்ருதி பேசுறதில் ஏதோ பெரிய பிரச்னை ஒளிஞ்சிருக்குது. அநேகமாக் தனுஷ் விவகாரமாதான் இருக்கும். அதாவது ஸ்ருதி முதலில் தனுஷின் ஜோடியாகதான் சினிமாவில் அறிமுகமானார். அந்த ‘3’ படத்தை இயக்கியது ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா. அந்த படப்பிடிப்பின் போது தனுஷும், ஸ்ருதியும் நல்ல நண்பர்களானாங்க. ஆனால் அதில் ஐஸ்வர்யாவுக்கு சில விஷயங்கள் பிடிக்கலை. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வளர்ந்து வளர்ந்து இன்னைக்கு மிகப்பெரிய லெவலில் இருக்கிறார்.

 

சமீபத்துல ஒரு பட நிறுவனம் தனுஷ் - ஸ்ருதியை ஜோடியாக்கி ஒரு புது படத்தை எடுக்க தயாராகியது. நல்ல இயக்குநர், சூப்பர் கதை. தனுஷ், ஸ்ருதி ரெண்டு பேரும் ஓ.கே. பண்ணிட்டாங்க. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு இது பிடிக்கலை. அவர் அந்தப் படத்தின் இயக்குநரிடமே இதை சொல்லியிருக்கிறார். அதனால ஸ்ருதிக்கு பதிலாக வேற ஒரு ஹீரோயினை தேடிட்டு இருக்கிறாங்க. 
இந்த விஷயத்துலதான் ஸ்ருதிக்கு செம்ம கோபம் ரஜினி ஃபேமிலி மீது. அதைத்தான் இப்படி ‘ரஜினியா! யாரு அவர்?’ அப்படிங்கிற ரேஞ்சுக்கு ரியாக்ட் பண்ணி ஸ்ருதி வெளிப்படுத்தியிருக்காங்க. ஆக்சுவலா தன் பேட்டியில ஸ்ருதி அரசியலை பத்தி பேசியிருக்க வேண்டியதுமில்லை, அரசியல் கேள்விகளை என்கரேஜ் பண்ணியிருக்க வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பர்ப்பஸாக அதுக்கு விடையளிச்சு, தன்னோட கோபத்தை தீர்த்திருக்காங்க!” என்கிறார்கள். 
போ நீ போ!
 

click me!